Tuesday, 14 February 2012

pinnoottam: 15/02/2012http://www.kazhuku.com/2012/02/blog-post_13.html

தமிழர்களின் நீண்ட கால நல்வாழ்வு குறித்து சிந்திக்கும் எவரும் கழுகு போன்றே எண்ணுவர். வேறு மூன்றாவது அணி வந்து தமிழகத்தை மாற்றாதா என ஏங்குபவர் அநேகம். // திமுக அல்லது அதிமுக இல்லாத, காங்கிரசைச் சாராத, மதவாதம் இல்லாத...

வேறு ஒரு கட்சியை நாம் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது....?// எந்த கட்சிகள் மிஞ்சின? இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் சேராத கட்சி எது? சென்ற தேர்தலுக்கு முன்பு வரை தே மு தி க., சென்ற தேர்தலின் போது ம தி மு க. கட்சித் தலைவர் என்று பார்த்தால் வைகோ மக்களின் அபிமானம் பெற்றவர் தான்; ஆனால் கட்சியின் குரல் தமிழகத்து தமிழர்களுக்காக ஒலிக்க வேண்டும்; ஈழத்து தமிழர்களும் தமிழர்களே ஆனாலும் அவர்களின் பிரச்னை முதல் இடம் பெற இயலாது என்பதை பாராளுமன்றத் தேர்தலின் போது கண்டோம். (ஆயிரக்கணக்கானவர் சுட்டு பொசுங்கும் போது இங்கு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது; ஈழம் முடிவுகளில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வரவில்லை. (இதோ இன விரோதி என்று கத்தும் பின்னூட்டங்கள் வரும். ஆனால் உண்மை நிலை இது தான் என்று நம்புகிறேன்).

அதாவது : வைகோ ஈழத்தை மையப் படுத்தி பேசுவதைத் தவிர்த்து முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளை சரியாக கையாண்டு தமிழர் நலம் பேணும் கட்சி என்று அடையாளம் காணப்பட வேண்டும். அது மாற்றுக் கட்சியாக அமைய வாய்ப்பு உள்ள கட்சி என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். மாநிலம் முழுதும் தனித்து போட்டியிட பணபலம் வேண்டும். கூட்டணி இல்லாமல் முடியுமா? முயற்சிக்கலாம் .

15 Feb 2012

posted by dondu(#111686 http://dondu.blogspot.in/ 74346665545885) atDondus dos and donts -

நூல் விமரிசனம் என்ற வரை உங்கள் மதிப்புரை நன்கு அமைந்துள்ளது; அப்புத்தகத்தை நாம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது.

சாதிப் பிரச்னைமீது சர்ச்சை குறைந்துவிட்டது போலவே தோன்றுகிறது.

சில கோணங்களில் பின்னூட்டங்கள் வந்திருந்த போதும், முழுமையான விவாதம் இல்லை. சுருக்கம் இவ்வாறு இருக்கலாம்: இஸ்லாமியர்களில் சாதிகள் உள்ளன; ஆனால் இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப பின் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளன.
இந்துக்கள் இடையிலும் புலம் பெயர்ந்து சென்றவர்கள்மத்தியில் (பிராமணர்கள் தவிர) சாதியின் தாக்கம் குறைவு; காலப் போக்கில் அழிந்து போகும் சாத்தியம் உள்ளது. குறிப்பிடத்தக்க சதவீதம் சாதிகள் ஒழியவேண்டும் (இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது மாறும்/ மாற வேண்டும் ) என்ற எண்ணம் காணப் படுகிறது. அது பிராமணர்கள் இடையே குறைவு. தங்களின் பதிவின் கருவே சாதிகள் ஒழியா (து) என்ற எண்ண ஓட்டத்தை தாங்கிப் பிடிப்பதைக் காண சற்று சங்கடமாக உள்ளது.