Saturday, 25 December 2010

25/12/2010

http://oosssai.blogspot.com/2010/12/2.html

சிறு வேலைகளுக்கு வெளி மாநிலத்தவர் தமிழகம் வருகின்றனர் என்றால் ஒன்று: குறைந்த கூலியில் வேலை செய்ய தமிழகத்தில் ஆட்கள் கிடைக்கவில்லை என்று தானே அர்த்தம்? கேரளத்திலிருந்து தச்சர்களும், பெயிண்டர்களும், சிற்றுந்து ஓட்டிகளும் வளைகுடா நாடுகள் சென்றதால் அவ்வேளைகளுக்கு தமிழகத்தில் இருந்து வரவழைக்கப் பட்டார்கள் என படித்திருக்கிறேன். (சமீப காலமாக உணவு விடுதிகளில் சாப்பிட்ட தட்டு எடுக்கும் வேலைகளுக்கு ஆண்கள் கிடைக்காததினால் பெண்களை அமர்த்தி இருப்பது கண்டு ஒரு விதத்தில் மகிழ்ச்சியே அடைந்தேன்); பீகாரிகள் சிறிய வேலைகளுக்கு வருவதும் இப்படித் தான் என எண்ணிக் கொண்டிருக்கிறேன். இங்கு வேலைக்கு வர ஆள் இருந்தும், தம் மாநிலத்தவர் என்பதால் அங்கிருந்து வரவழைத்தால் சரியில்லை தான்.

பின்னூட்டத்தில் உண்மையான நிலை என்ன என்று அன்பர்கள் எழுதுவார்கள் என நம்புகிறேன்.

Friday, 24 December 2010

25/12/2010

http://krpsenthil.blogspot.com/2010/12/blog-post_22.html

பலருடைய உள்ளக் கிடக்கை. விவசாயம் குறித்து ஏதாவதொரு செய்தியைப் பார்த்தபின் அல்லது ஒரு விவசாயியின் தற்கொலை, கிராமம் பாழ் ஆகிறது என்று ஒரு திரைப்படம் பார்க்கும் பொது வருவது : நாமும் கிராமம் சென்று விவசாயத்தை நல்ல முறையில் செய்து நாட்டு முன்னேற்றத்துக்கு நம் பங்கு ஆற்ற வேண்டும் என்று தோன்றும் ஒரு நினைவுக்கீற்று.
செயல் படுத்த முனைவோர் சிலரே. அவர்கள் முயற்சி வெற்றி அடைந்ததா என தகவல் இல்லை. பின்னோட்டம் இட்ட அன்பர் ssk, jayaprakashvel தங்கள் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.
என்னைப் போல பலரும் ஆர்வமாக உள்ளோம். தயை கூர்ந்து, ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி/லீசுக்கு எடுத்து நிர்வாகம் செய்ய தேவையான ஆட்கள் , பண முதலீடு, பயிர்கள் சாய்ஸ், பொருளாதார புள்ளிவிவரங்கள் எவரேனும் கொடுத்தால் குறைந்த பட்சம் பத்து பேர் சீரியஸாக இதை செயல் படுத்த கூடும்.

Monday, 6 December 2010

pinnoottam 7dec 2010:லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்

http://site4any.wordpress.com/2010/11/21/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/#comment-22


நல்ல கருத்து.
லஞ்சம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் கொடுப்பதற்கு சில காரணங்கள்: ஒன்று: அவசரம் அவசியம். ; இரண்டு: சிரமப்படாமல் காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்று சராசரி மனிதன் நினைப்பது; மூன்று: எளிதில் வெளி மனிதன் புரிந்து கொள்ள முடியாமலும், மேலும் அதற்கு செலுத்தவேண்டிய படிவங்கள் சரிவர விநியோகம் ஆகாமலும் பார்த்துக்கொள்ளும் அரசு ஊழியர்.
புது வாகனம் பதிவு செய்து கொள்ள போக்குவரத்து துறை அலுவலகம் சென்றால் அங்கு தேவையான படிவங்கள் இரா; விசாரணை கவுண்டர் என்று ஏதாவது இருக்குமா? புரோக்கர்கள் தான் எங்கும் நிறைந்து இருப்பர்.
பள்ளியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது, வாங்கக் கூடாது என கற்பிப்பது முக்கியம் தான். கூடவே, அரசு அலுவலங்களில், சராசரி நபர் செய்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை மாதிரி படிவத்துடன் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களுடன் கற்பிப்பது அவசியம். உதாரணம்: ராசன் கார்டு செய்து கொள்வது எப்படி? ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி? . முதலியன சொல்லிக் கொடுப்பது அவசியம்.
ஒரு சின்ன யோசனை: சராசரி மனிதனுக்கு வேண்டிய விவரங்களை ஒய்வு பெற்ற அரசு ஊழியரில் எவரேனும் கைப்ரதி வெளியிட்டால் உதவியாக இருக்கும். லஞ்ச ஒழிப்பு குழுக்கள் இதற்கு பண உதவி செய்ய வேண்டும்.










நெற்குப்பை தும்பி

pinnoottam: 6 dec 2010

http://nanduonorandu.blogspot.com/2010/12/blog-post_06.html
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அம்பேத்கர் சொன்னதை பதிவு செய்ததற்கு நன்றி.
அதற்குப் பின் சென்ற ஆண்டுகளில் பலப்பல மாற்றங்கள் வந்துள்ளன.
ஐயாவின் எண்ணத் தாக்கத்தால் வந்த நல்ல மாற்றங்களை பதிவு செய்ய வேண்டும்; அவர் கருத்துக்கு மாறாக அரசுகள் நடவடிக்கை எடுத்ததனால் வந்த விளைவுகளை பதிக்க வேண்டும். இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும். அரசியல் சட்டத்தில் ஒதுக்கீடு வந்ததற்கு மூல காரணமான அவர் நினைவு நாளில் அது எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவம் வர அல்லது சமத்துவம் நோக்கி நகர எந்த அளவுக்கு உதவி இருக்கிறது என்று பதிய வேண்டும்.
சனத்தொகை கணக்கெடுப்பு சாதி வாரியாக வந்தால் நடைமுறையில் உள்ள ஒதுக்கீடு முறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சிந்திக்க வழி செய்யும்.

Wednesday, 10 November 2010

குறைந்த நீர் வளத்துடன் ஆப்ரிக்க நாடுகளைப் போல விவசாயம்

http://maravalam.blogspot.com/2010/11/sub-saharan-africa-200-300.html


தமிழகத்திலும் இதைப் போல மழை நீரை மட்டும் நம்பியே கூட நல்ல முறையில் விவசாயம் செய்ய முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு, நன்செய்/அரிசி/காவிரி இவற்றை விட்டு வெளியே ஆலோசிக்க வேண்டும். அப்படி வாதம் செய்ய எவரேனும் முன் வந்தால், தமிழின விரோதி, கர்நாடக சொம்பு தூக்கி என பேசத் துவங்குகிறார்கள்.
ஒன்று: விவசாயம் கற்றவர்கள், விவசாயத்தை மட்டுமே நம்பி இராமல் ஓரளவு பண வசதி உள்ளவர்கள், தன்னார்வ நிறுவனங்கள், அரசு உதவியுடன் கூட்டுறவு சங்கங்கள் முதலியன கொஞ்சம் வேறு முறைகள், வேறு பயிர்களை முயலலாம். அதைப் பார்த்து சராசரி விவசாயிகளும் பின்பற்றுவார்கள். அரசு விவசாய அலுவலர்கள், பஞ்சாயத்து அலுவலர்கள் இதை பரப்ப வேண்டும்.

Tuesday, 31 August 2010

pinnoottam 31 08 2010

http://smuthukumaran.wordpress.com/2010/08/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#comment-35

பலவற்றில் முன்னேறி உள்ள தமிழகம் இந்த விஷயத்தில் இரண்டு நூற்றாண்டுகள் பின் தங்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
நான் ஐம்பதுகளிலே, அறுபதுகளிலே பள்ளி, கல்லூரியில் தென் தமிழ் நாட்டில் படித்தவன். அப்போது சாதி பெயரில் இருக்கக் கூடாது; பொது இடத்தில் சாதியைப் பற்றி பேசக் கூடாது; பேசினால் அவமானம் எனக் கருதப்பட்ட காலம். பள்ளியிலே உடன் பயிலும் மாணவனின் சாதி எது என அறிய முற்பட்டால் கேவலம் எனக் கருதிய காலம். ஓரளவு தமிழில் பேசும் பொது கூட குழூஉக்குறி தவிர்த்து சமச்சீர் மொழியில் பேச முயன்ற காலம். கலப்பு திருமணங்கள் சமுதாயத்தில் தலையெடுத்த காலம். அதை எல்லாம் பார்த்து நாங்கள் சில பத்தாண்டுகளிலே சாதி அறவே போய் விடும் என நினைத்த காலம். அப்படியே போகா விட்டாலும், உயர்வு/தாழ்வு என நினைக்க , பேசப் பட மாட்டாது என எண்ணிய காலம்.
ஐயகோ! இப்படி அடைந்திருந்த முன்னேற்றம் மறைந்து இப்போது நாற்பது ஆண்டுகளில் இருநூறு ஆண்டுகள் பின்னேறி இருக்கிறோம்.

தமிழ் சமூகத்திலே நடு நிலையில் நின்று சிந்திக்கிறவர்கள் இந்த சமீப கால நிகழ்வுகளை சீர் தூக்கி பார்த்து, இவ்வாறு ஆனதற்கு காரணங்கள் என, ஒவ்வொரு பகுதியும் ( sections of the society) எந்த விதத்தில் இதற்கு வினை ஊக்கிகளாக இருந்திருக்கிறது , இதை மாற்ற ஒவ்வொரு பகுதியும்/குழுவும் /கூட்டமும் என்ன செய்ய வேண்டும் என கலந்து உரையாட வேண்டும். அரசியல் வாதிகளை கூடியவரை தவிர்த்தல் வேண்டும்.
இந்த பின்னூட்டம் நீண்டு விட்டது. காண்பவர்கள் கருத்து கூறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, 26 August 2010

ஆகஸ்ட் 26, 2010

http://vikatandiary.blogspot.com/2010/08/blog-post_25.html
தமிழில் எழுதுவதிலும், உச்சச்சரிப்பிலும் உள்ள குறைகளை கண்டு அதைப் பற்றி நினைக்கும், பேசும், எழுதும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என அறிய மகிழ்ச்சி .
தொலைக் காட்சியில் தமிழ் சித்திரவதை செய்யப் படுவது கண்டு தினம் தினம் மனம் வெதும்புபவன் நான். ஒரு முறை தமிழ் திரைப் படம் ஒன்று ஒளி பரப்பாகிக் கொண்டு இருந்தது. கால் மணிக்கு ஒரு முறை ஒரு பெண்மணி " இந்த திரைப்படத்தை "வழங்கியவர்கல் " அல்லது "வளங்கியவர்கல்" என திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருந்ததால் படம் காண்பதையே நிறுத்திவிட்டேன். செய்தி அறிக்கை எழுதுபவர்களுக்கு ஒருமை/பன்மை வேறுபாடு மறந்து விட்டதோ என அடிக்கடி தோன்றும். உ-ம: சட்ட அவையில் வினாக்கள் "எழுப்பப்பட்டன " என்றில்லாமல் "எழுப்பப்பட்டது ".
ஒரு காலத்தில், அதாவது வானொலி மட்டுமே இருந்த காலத்தில், பேட்டி அளிப்பவர் தமிழ் உச்சரிப்பில் தவறு செய்வார்; ஆனால் கேட்பவர் சரியாக உச்சரிப்பார். இப்போது கேட்பவர்கள் கூட உச்சரிப்பை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களாக இருப்பது மோசம்.
தொலைக் காட்சி நிலையத்தினர் குறைந்த பட்சம் செய்தி அறிக்கைகளை சரி பார்க்க தமிழ் அறிஞர்களை நியமிக்க வேண்டும். மேலும், அவர்கள் அலையில் வரும் நிகழ்ச்சிகளை ஒரு தமிழ் அறிஞர் தொடர்ந்து பார்க்க வேண்டும். தமிழில் தவறு செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீண்டும் வாய்ப்பு பெறா வண்ணம் செய்ய வேண்டும்.

Saturday, 3 July 2010

மற்றும் ஒரு நல்ல பதிவு.

http://deviyar-illam.blogspot.com/2010/07/blog-post.html#comment-form
மீண்டும் நல்ல பதிவு.
அமெரிக்கா வணிக முறையினால் பல ஏற்றுமதியாழர்க்கு பல முறை எதிர்பாராத சமயத்தில் இழப்பு என்ற தொனி ஒலிக்கிறது என நான் கருதுகிறேன்.
"தொழிலாளர்கள் நல வசதிகள் போன்ற விஷயங்கள் கூட அவர்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறும்; ஆனால் அவற்றை நம்மவர் கருத்தோடு கடைபிடிப்பது இல்லை; ஆகவே இழப்பு: ஒன்று தொழிலாளர்களுக்கு சரியான வசதி; இரண்டு: ரிபீட் ஆர்டர்; மூன்று : அதனால் தொழிலாளர்களுக்கு பணி./ கூலி". என்பது தான் சரியான inference என்று நான் கருதுகிறேன்.
அதாவது , அதிக லாபம் என நாம் கருதுவது தவறு ; அந்த அதிக பணம் நாம் செய்ய வேண்டிய பணிகளுக்காக, - இந்த இடத்தில், தொழிலாளர் வசதி. இந்திய தொழில் முதலாளிகள் அதிக லாபம் எனக் கருதும் தொழில்களில் இதே அணுகுமுறை இருப்பதால் தான் நீண்ட கால விளைவுகளை -உதாரணம்: கழிவு பொருள் சுத்தம் செய்தல் முதலியன. - குறுகிய கால லாபங்கள் நீண்ட கால இழப்புகளை மறைத்துவிடுகின்றன

Thursday, 17 June 2010

http://marmayogie.blogspot.com/2010/06/blog-post_14.html

உங்கள் பதிவை நான் வரவேற்கிறேன். புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது தவறல்ல; தேச துரோகமும் அல்ல. ஆனால் அதை தெரிவிப்பது வெடி குண்டு வைத்து இரண்டாயிரம் மக்கள் போகும் புகை வண்டியை தகர்த்து அல்ல. இதை சொல்வது தான் உங்கள் பதிவு: இப்படிச் சொன்னால் தமிழின விரோதி; ராஜபக்சேயின் கைக்கூலி; இப்படித் திட்டுவது தான் தமிழ் இனத்துக்கு செய்யும் நன்மை என நம்பும் கூட்டமும் இன்னும் உள்ளது http:www.makaranthapezhai.blogspot.com
June 15, 2010 4:12 AM

Wednesday, 16 June 2010


ரயில்வேயில் நடக்கும் கொள்ளை
https://www.blogger.com/comment.g?blogID=7676335175197190854&postID=3927188406842756384&page=1&token=1276757681345_AIe9_BGandRlHJzcXkf1Ma5a51BzCBWW669V4lw5qON_gazU9Vu9p_YK53rLj-u9FYfMUB-T09QZYQvqocH24Tm4Bx6dh4EEBKF2C9h06kJoGDG0ZaWOc8siXdtlklsFXAaLguTUJxsNRsg94kWoeAzAbcamPTup-zvL5DsSnHG_kd3K8JzUYAD2IkOls4x_kIANK0A7pdlLdtsnuTYGa1iwQmEV29Ga6g
என் அனுபவம் மிக வேறானது.
கணினி முன்பதிவு முறையும், r a c முறையும் வருவதற்கு முன்னால், தூங்கும் வசதி பெட்டி நடத்துனர்கள் அதிகம் பணம் வாங்கிக்கொண்டு, இருக்கைகள் கொடுத்தனர்; ஆனால் இப்போது, அது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது என நான் கருதுகிறேன்.
என் முதல் தூங்கும் வசதி பெட்டி பயணம் 1972; (இது வரை எட்டு மாநிலங்களில் பணி செய்திருக்கிறேன்; ஆண்டுக்கு ஓரிரு முறை தமிழ் நாடு சென்று வந்திருக்கிறேன்; அதாவது மிக நீண்ட புகை வண்டி பயணங்கள்; பதிவு செய்யாமல் பயணிக்க முடியாத பயணங்கள்).
தத்கால் முறையும் மிக பயனுள்ளதாக இருக்கிறது.அன்ரிசர்வ்ட் பேட்டிகள் ஓரிரண்டு அதிகம் வைக்கலாம் என்பது சரியே

நெற்குப்பை.தும்பி வலைப்பதிவு: www.makaranthapezhai.blogspot.com

Tuesday, 1 June 2010

Thursday, 27 May 2010

http://kanthan25.blogspot.com/2010/05/blog-post.ஹ்த்ம்ல்




Saturday, May 22, 2010

கணவரின் புகைப்படங்களுடன் அவர்களைத் தேடியலையும் தமிழ்ப் பெண்கள் – ஈழம் சென்று திரும்பிய அர்ஜூன் சம்பத்தின் கண்ணீர் பேட்டி..!

– ஈழம் சென்று திரும்பிய அர்ஜூன் சம்பத்தின் கண்ணீர் ,

// ஈழப் போரின்போது கடைசி நேரத்தில் தங்களைக் காப்பாற்ற இந்தியக் கப்பல் வரும்
என்று எதிர்பார்த்தவர்கள் “உங்களைத்தானே நம்பிக் கிடந்தோம். இப்படிப் பண்ணி விட்டீர்களே.. பார்த்தீங்களா எங்க நிலைமையை..?” என்று கதர்ரினார்கள். 11-வது படித்துக் கொண்டிருந்ததாகச் சொன்ன ஒரு மாணவி, “கடந்த வருடம் மே 11-ம் தேதிவரை இந்தியாவில் இருந்து கப்பல் வரும். எங்களைக் காப்பாற்றிக் கொண்டு போகும் என காத்திருந்தோம்ண்ணா.. ஆனால், இப்படி வந்து பார்ப்பீர்கள் என எங்களுக்குத் தெரியாதுண்ணா.//

28 may 2010

http://karisalkaran.blogspot.com/2010/05/blog-post_24.html

தமிழ் நாட்டிற்கு வெளியிலே பயன் படுத்த முடியாது என்பதாலும், தமிழ் நாடு வேலை வாய்ப்பில் தன்னிறைவு அடையும் காலம் அருகில் இலாத காரணத்தாலும் தமிழில் பொறி இயல் பாடம் தற்போது சரி ஆகாது. தமிழில் பொறி இயல் கற்பிக்க முடியாது என்பது நம் கருத்து அல்ல; நிச்சயமாக கற்றுக்கொடுக்க முடியும் திரு முகிலன் சொல்வது இந்த இடத்தில் சரியே.

சுய சிந்தனைக்கு தாய் மொழியில் கற்பது சிறந்தது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

என்னைக் கேட்டால் (யாரும் கேட்கவில்லை என்பதால் தான் வேறொருவர் பதிவில் பின்னோட்டம்!) , எங்கள் காலத்தில் இருந்தது போல் (எஸ் எஸ் எல் சி : தமிழ் மீடியம்) பத்து வரை தாய் மொழிக் கல்வி; பதினோன்றிலிருந்து, பட்டம் முதலியவை ஆங்கிலம் மூலம். சிறு ஊர்களில் கற்று வந்த என்னைப் போன்ற மாணவர்கள்கொஞ்சமோ நிறையவோ சிரமப் படுவது உண்மை; ஆனால், பதிவர் சொல்வது போல, பட்டம் பெற நினைப்பவர், அந்த கால கட்டத்தைக் கடந்து வந்து, ஆங்கிலத்தில், புரிந்து கொண்டு கற்று, எழுத, உரையாட முடிகிறது.

தமிழையும் சீன மொழியையோ, ஜப்பானிய மொழியையோ,ஜெர்மானிய மொழியையோ ஒப்பீடு செய்தல் மீடியம் என்ற வகையில் பொருளாதாரக் காரணங்களினால் சரியல்ல. தமிழ் இலக்கியங்கள், சமூக இயல் முதலியவை மட்டுமே தமிழ் மீடியத்தில் கற்பது உசிதம் ஆகும். அதே போல, இந்தி திணிப்பையும் கற்கும் மொழி மீடியம் இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்தி திணிப்பு அரசியல்; மற்றும் காலத்தின் கட்டாயம்.

matriculation பள்ளியோ அல்லது வேறு சிஸ்டமோ, தாய் மொழி கல்வி குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு கற்காதவ
ர்கள், தன்னைச் சுற்றி நிலவும் இந்திய சமூக நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல், முட்டாள்களாக இருப்பதை தினம் தினம் காண்கிறேன்.

Saturday, 15 May 2010

comments: முஸ்லிம் பெண்கள் என் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள்

http://seasonsnidur.wordpress.com/2010/04/18/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/

நல்ல பதிவு. இது போல பதிவு கண்டதில்லை.

இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்
ஒன்று: முஸ்லிம் பெண்கள் கல்வி பெறுவது அவசியம். அதுவும் "மாடர்ன் " கல்வியாக , அதாவது மதரசா கல்வியோடு பொது கல்வி இருந்தால் நல்லது.
இரண்டு: உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட இருவரும் (என்னைச் சேர்த்து) முஸ்லிம் இல்லாமல் இருப்பது அதாவது இஸ்லாமிய அன்பர்கள் இதை வரவேற்க வேண்டும் என எழுதாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது; இஸ்லாமியர் அல்லாதவர்களும் இஸ்லாமிய சமூகத்தினர் மேம்படைய வேண்டும் என உள்ளார விரும்புகிறார்கள் என்பதும் மீண்டும் உறுதி ஆகிறது

Friday, 14 May 2010

பின்னூட்டம் ௧௪ மே 2010

pl see: http://nanavuhal.wordpress.com/2010/04/26/mathamaatram/#comment-2682

/பின்னூட்டம் இட்ட அன்பர்கள் ஒன்றை சொல்ல வில்லை.
மத பிரசாகராக இருந்துகொண்டு பிரசாரம் செய்வதும்
டெபுடி டாசிள்தாரராக இருந்து கொண்டு தன பதவியை தவறாக பயன்படுத்தி மத பிரசாரம் செய்வதும் ஒன்று ஆகாது

Thursday, 13 May 2010

pinnoottam

13 may 2010
comment posted to
http://parvaiyil.blogspot.com/2010/05/blog-post_13.html


அந்த பிட் படம் பார்த்தோம்
அந்த பெண் நிரூபர் "நீரா ராடியாவுடன் பேசினீர்களா " என்று தான் கேட்பது போல உள்ளது. அதற்கு, ராஜா, "நான் ஒளிப்பதிவு கேட்கவில்லை, எழுத்து வடிவம் தான் பார்த்தேன்" என்று திரும்ப திரும்ப சொல்வது போல் உள்ளது; தான் பேசினேன்
அல்லது பேசவில்லை என்றோ, பேசியது திரித்து வெளியிடப் படுகிறது என்றோ சொல்லியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.

Sunday, 9 May 2010

comment put on 10 may 2010
http://rathnapeters.blogspot.com :
idhu oru thodarkathai

இது ஒரு தொடர் கதை என்பது இந்தியாவின் சாபக்கேடு.
பெரிதாகப் பேசப்பட்ட போபோர்ஸ் துப்பாக்கி ஊழல் வெளிவந்து இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை ஊழல்கள்?
ஒன்றிலாவது ஒரு அதிகாரியோ, அரசியல் வாதியோ தண்டனை எய்தியதாக செய்தி இல்லை.
இன்னுமொன்று:: அரசு மாறலாம்; அரசியல்வாதி மாறலாம். (வாக்கு மறுத்து); அதிகாரி மாறவே மாட்டார்; அவரும் நேர்மையாக மாற மாட்டார்; அவரையும் மக்கள் மாற்ற முடியாது. சொல்லப் போனால், இந்தியாவின் அரசுஇயந்திரத்தில் வீக் லிங்க் அதிகாரிகள் தான்