Saturday, 22 January 2011
24/01/2011
சித்ரா சொன்னது போல் ........ விடுமுறை தினங்களில் வரும் நிகழ்ச்சிகள் பட்டிமன்றமா இல்லையா என ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.
இலக்கியத் தரம் வாய்ந்த பட்டிமன்றங்களை அறுபதுகளில் ரசித்த எம்மைப் போன்றவர்க்கு கொஞ்சமும் பிடிக்கா
வண்ணம் இவை யுள்ளன.
பழைய, புதிய என்று கோடு போட்டு பிரிப்பதே சரி இல்லை. . த்யாகராஜ பாகவதர் பழையவர், எனக்கு T M S, சுசீலா சமகாலத்தவர்; எஸ் பி பாலசுப்ரமன்ய்மும், இளையராஜவுமே புதியவர்கள் தொண்ணூறுகளில் அதிகமாய் கேட்டவர்க்கு இளையராஜா பழையவர்; ரஹ்மான் புதியவர்; அடுத்த"தலைமுறைக்கு" இது போல் மாறும்.
காலப் போக்கில் வரிகளுக்கு முக்கியம் குறைந்து, இசைக்கு முன் மரியாதை வந்ததை மறுக்க முடியாது.
Monday, 10 January 2011
-
கொஞ்சம் வித்தியாசனமான பதிவு.
இரண்டு கழகங்களை விட்டால் வேறு நாதி இல்லாமல் இருக்கிறோமே என்று அங்கலாய்க்கும் பதிவுகள் ஏராளம்.
ஒரு சில காப்டனுடன் காங்கிரஸ் சேர்ந்து மூன்றாம் அணி என்று கூட கண்டிருக்கிறேன்.
இது வரை கூட்டணி விட்டு கூட்டணி தாவிக்கொண்டிருந்த மருத்துவர் ஒரு அணியை அமைக்கலாம் என்று இது வரை எழுதிக் காணவில்லை; அவர்களே அப்படி நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இது போல் அவர்களும் சிந்திக்கலாம்.
ஆனால் ஒன்று: மருத்துவர் இது வரை நீண்ட காலத் திட்டங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட பிரச்னைகளைப் பற்றியே பேசியதாக நினைவு.: பொறி இயல், மருத்துவ கல்விக்கு பொது தேர்வு வேண்டாம்; கிராமப் புற மாணவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்; மது விலக்கு; பொருளாதார முன்னேற்றத்தில் வன்னியர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை; போன்ற சில.
விவசாயத்தை, மேலும் விவசாயிகளின் முன்னேற்றம், அவர்கள் நிலங்களை கையகப் படுத்தினால் அவர்களுக்கு தர வேண்டிய ஈட்டு தொகை; தொழில் மேன்பாடு; கிராமங்களில் கல்வி வசதி, மருத்துவ வசதி, வணிகத்தில் தமிழகம் என்னென்ன செய்யலாம் ; பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதா வேண்டாமா,
ஆங்கிலக் கல்வி/தாய் மொழி கல்வி, சிறு தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, போன்ற விஷயங்களில் தொலை நோக்குடன் கொள்கைகள்/அணுகுமுறை எனப் பல கூறலாம்.
ஏதாவதொரு கூட்டணியிலேயே இருந்ததால், அந்த அணியின் கொள்கைகளை விட்டு புதிய அணுகுமுறையை அழுத்திச் சொல்ல முடியாத நிலை இருந்தது உண்மை தான். அது இப்போது செய்யப்பட வேண்டும். வரும் தேர்தலில் இல்லையெனில், அடுத்த தேர்தலில் பெரும்பான்மை என நினைத்து செயல் பட வேண்டும்.
மிகப் பெரிய விஷயம்: ஊழல் குறித்து அதை களைவதைப் பற்றி சிறப்பான அணுகுமுறையைக் காட்ட வேண்டும். சிந்தனை தமிழகம் முழுதுக்குமானதாக அதாவது, வன்னியர்/வட தமிழகம் என்று குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளி வர வேண்டும்.
அதாவது பிள்ளையார் சுழியில் இருந்து துவங்க வேண்டும். எண்ணம் செயல்பட வாழ்த்துக்கள். 10/01/2011 - January 10, 2011 5:05 PM
- nerkuppai thumbi said...
Saturday, 8 January 2011
08/01/2011
நல்ல பதிவு. நன்றி.
சில புதிய விவரங்கள் தெரியப்பெற்றேன்.
இந்த ஜல்லியடி அறுபதுகளில், எழுபதுகளில் , உயர்நிலை வகுப்புகளில் இருந்தவருக்கு மட்டுமே புரியும். அதற்கு பிற்காலம், தமிழ் மீடியம் குறைந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில மீடியம் மிகுந்ததால் தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் போன்ற வசனங்கள் கேட்டிருக்கமாட்டர்கள். இப்போதும் வலை உலகில் (பயன் படுத்துவோர் முப்பது நாற்பது சில்லறை அகவை இருப்போர் அதிகம் என நினைக்கிறேன்) இந்த அளவு ஜல்லியடி இருப்பது எனக்கு ஆச்சரியமே.
அறுபத்தேழில் பள்ளி முடித்த எனக்கு, பதிவர் சொன்ன அனுபவங்கள் இல்லை. ஒரே தமிழ் ஆசிரியர் - நடு நிலை எண்ணங்கள், இறைப் பற்றுடன்.
நெற்குப்பை தும்பி
Thursday, 6 January 2011
07/01/2011 Dr Kandaswamy's blog
இரண்டு: ஜாடிக்கு கணக்கு கேட்கத் தெரிந்தவர், வாங்கிய அளவே அதிகமா, சரியானதா, என சரி பார்க்க வேண்டும்; சரியான விலையில்,, சரியான விதி முறையைப் பின்பற்றி வாங்கப் பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு ஜாடிக்கு கணக்கு கேட்டுக்கொண்டு இருந்தால் இங்கு உள்ளவர்களும், டப்பாவையோ, ஜாடியையோ காட்டி திசை திருப்புவது எளிது.
மூன்று: காபி, டிபன் , (அசைவ) சாப்பாடு முதலியவற்றுடன் (முன்பெல்லாம் வேறு மாநிலங்களில் "திரவ உணவு", இப்போது மது விலக்கு இல்லாததால் தமிழ்நாட்டிலும் "தண்ணி"), இவற்றை படைத்து அறிக்கையை சரி செய்வது வழக்கம் ஆகி விட்டது.
ஆங்கில ஆட்சியில் இவை எல்லாம் இருந்தது தான். இதற்கு கூட அவர்கள் தான் பழக்கி இருக்கின்றனர். ஆனால் நம்மவர் சர்க்காரியா கமிஷன் சொன்னது போல் விஞ்ஞான ரீதியில்,ஊழல் செய்கிறார்கள். தணிக்கை முறை அதை தெரிந்து கொள்வதில்லை; அல்லது கண்டு கொள்வதில்லை. வாழ்க தணிக்கை முறை.