ஒன்று: பரிசோதனைச் சாலைக்கு தணிக்கைக்கு வரும் அதிகாரிகளுக்கு வேதி இயல் தெரிந்து இருந்தால் நலம். அவர்கள் சரித்திரத்தில் இளங்கலை படித்திருந்தால், ஆசிட் என்றால் அவர்களுக்கு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால் வயிற்றில் ஆசிட் என்பார்களே அது என எண்ணுவார்கள். ( அரசு அதிகாரிகள் தனக்கு தெரியாததை இன்னொருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்வதில்லை. தமக்கு தெரியாதது இந்த உலகத்தில் இல்லை; அப்படி எதாவது இருந்தால் அது உபயோகமற்றது என்று எண்ணம். மேலும், தமக்கு தெரியாதது என்று காட்டிக் கொள்ளக் கூடாது என்று பயிற்றுவிக்கப் பட்டு உள்ளனர் போலும்!)
இரண்டு: ஜாடிக்கு கணக்கு கேட்கத் தெரிந்தவர், வாங்கிய அளவே அதிகமா, சரியானதா, என சரி பார்க்க வேண்டும்; சரியான விலையில்,, சரியான விதி முறையைப் பின்பற்றி வாங்கப் பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு ஜாடிக்கு கணக்கு கேட்டுக்கொண்டு இருந்தால் இங்கு உள்ளவர்களும், டப்பாவையோ, ஜாடியையோ காட்டி திசை திருப்புவது எளிது.
மூன்று: காபி, டிபன் , (அசைவ) சாப்பாடு முதலியவற்றுடன் (முன்பெல்லாம் வேறு மாநிலங்களில் "திரவ உணவு", இப்போது மது விலக்கு இல்லாததால் தமிழ்நாட்டிலும் "தண்ணி"), இவற்றை படைத்து அறிக்கையை சரி செய்வது வழக்கம் ஆகி விட்டது.
ஆங்கில ஆட்சியில் இவை எல்லாம் இருந்தது தான். இதற்கு கூட அவர்கள் தான் பழக்கி இருக்கின்றனர். ஆனால் நம்மவர் சர்க்காரியா கமிஷன் சொன்னது போல் விஞ்ஞான ரீதியில்,ஊழல் செய்கிறார்கள். தணிக்கை முறை அதை தெரிந்து கொள்வதில்லை; அல்லது கண்டு கொள்வதில்லை. வாழ்க தணிக்கை முறை.
Thursday, 6 January 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment