Saturday, 21 June 2014

http://www.vinavu.com/2014/06/19/auto-drivers-meet-discusses-issues/#respond

ஒரு அடிப்படை சந்தேகம்: புதிய ஜனநாயகம் இடதா? வலதா?
அனைத்து பதிவுகளையும் ஊன்றிப் படித்தாலும் வேறுபாடு கண்டறியத் தெரியாத மூடர்களாக இருந்து விட்டோம். செய்திகளை சீனக் கண்ணோட்டத்தில் காணவேண்டுமா அல்லது ரஷியக் கண்ணோட்டத்தில் ஒப்பிட வேண்டுமா என்று புரிதல் இல்லை; மன்னிக்கவும்.
அல்லது, சீனத்திலும், ரஷியாவிலும் உலகமயமாக்களில் எடுத்துக்கொண்ட கொள்கை மாறுதல்களை அவதானித்து இந்திய கம்யூனிசம் (இரண்டு சாளரங்கள் ) மூல மார்க்சிஸ்ட் சித்தாந்தத்தில் தனியாக நிலைப்பாடு எடுக்கின்றதா?



http://www.vinavu.com/2014/06/20/criminals-bjp-mps-ministers/#comment-144523

பொருளாதாரக் கொள்கைகளில் கம்யூனிசத்தைப் பின்பற்றாமல் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொண்டிருக்கிறோம்.  போகட்டும்.குறைந்த பட்சம் சமுதாய ஆள்மையில் சீனாவும் ரஷியாவும் மைனாரிட்டி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவர்களின் நலம் பேண எவ்வாறு சட்டம் இயற்றி செயல் படுத்திவருகிறார்கள் என்று பதிவர் சொன்னால் மக்களின் புரிதலும், அணுகுமுறையும் மாறி, அரசையும் மாற்ற முயல்வர் அல்லவா?  குறிப்பாக ஜியங்க்ஜென் பகுதியில் இயுஇர் முஸ்லிம்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறது அங்கு குண்டு வெடிப்புக்கள் உலக சராசரியை விட குறைவாக இருப்பது ஏன் என்று சொல்லுங்கள்.