http://oosssai.blogspot.com/2010/12/2.html
சிறு வேலைகளுக்கு வெளி மாநிலத்தவர் தமிழகம் வருகின்றனர் என்றால் ஒன்று: குறைந்த கூலியில் வேலை செய்ய தமிழகத்தில் ஆட்கள் கிடைக்கவில்லை என்று தானே அர்த்தம்? கேரளத்திலிருந்து தச்சர்களும், பெயிண்டர்களும், சிற்றுந்து ஓட்டிகளும் வளைகுடா நாடுகள் சென்றதால் அவ்வேளைகளுக்கு தமிழகத்தில் இருந்து வரவழைக்கப் பட்டார்கள் என படித்திருக்கிறேன். (சமீப காலமாக உணவு விடுதிகளில் சாப்பிட்ட தட்டு எடுக்கும் வேலைகளுக்கு ஆண்கள் கிடைக்காததினால் பெண்களை அமர்த்தி இருப்பது கண்டு ஒரு விதத்தில் மகிழ்ச்சியே அடைந்தேன்); பீகாரிகள் சிறிய வேலைகளுக்கு வருவதும் இப்படித் தான் என எண்ணிக் கொண்டிருக்கிறேன். இங்கு வேலைக்கு வர ஆள் இருந்தும், தம் மாநிலத்தவர் என்பதால் அங்கிருந்து வரவழைத்தால் சரியில்லை தான்.
பின்னூட்டத்தில் உண்மையான நிலை என்ன என்று அன்பர்கள் எழுதுவார்கள் என நம்புகிறேன்.
Saturday, 25 December 2010
Subscribe to:
Post Comments (Atom)
நண்பரே, வருகைக்கு நன்றி. இங்கு வேலை செய்ய ஆட்கள் இருந்தும் கூட பிற மாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வருவதும் நடக்கிறது. சில வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் அழைத்து வருவதுமுள்ளது. நாம் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்களை உணர முடியும். என்னவென்றால், ஒவ்வொரு தொழிலாக தமிழன் அப்புறப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறான். இங்கே ஆட்கள் இருந்தும், வெளியே இருந்து ஆட்களை அழைத்து வர ஒரு காரணம், கூலி வேறுபாடு என்பதை விட, நம்மவர்கள் போதைக்கு அடிமையானது ஒரு காரணம்... தவறு நம்மிடமும் உள்ளது. அதை சரி செய்யவில்லை என்றால் நம் வளம், நம் நலம் அழிந்து போகும். மேலும் பல விளக்கங்களைகருஞ்சட்டையாளருக்கு சில கேள்விகள்-1இடுகையில்
ReplyDeleteதந்துள்ளேன். நன்றி