Sunday, 13 February 2011

pinnoottam 13/02/2011

நல்ல பதிவு. தமிழ்ப் பற்று உள்ளவர்களே தமிழை வளர்க்கவும், குறைந்தது நலிந்து கோளாமல் இருக்கவும் முயல்வார்கள் எனலாம்.
தமிழ்ப் பற்று என்பது தமிழை பயிற்று மொழியாக உயர்நிலைப்பள்ளி வரை படித்தவர்களுக்கே இருப்பதைக் காண முடிகிறது. எழுபதுகளுக்குப்பின், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகமாகி, ஆங்கில பயிற்று மொழியில் கற்பவர்களே மிக அதிகம் ஆகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலோனார் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வீட்டிற்குள் அதுவும் தாயிடம் பேசுவது மட்டுமே தமிழாக இருக்கிறது என நினைக்கிறேன். அவர்கள் சிந்திப்பது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் நினைக்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் பள்ளி பயின்றோர் இது குறித்து கருத்து தெரிவித்தால் நன்றி உடையனவனாக இருப்பேன். http://valaakam.blogspot.com/2011/02/blog-post.html

Wednesday, 9 February 2011

09.02.2011

http://www.maattru.com/2011/02/blog-post_3135.html
இது போல் இன்னும் எவ்வளவு ஊழல்களோ?
தலித்துகள் முன்னேற வேண்டும் என்று அழகாக காகிதத்தில் திட்டங்கள் தீட்டி, பணம் அரசிடமிருந்து கறந்து, பொய் ஆவணங்கள் தயார் செய்து இதை ஒவ்வொரு வருடமும் செய்து, என்று நீண்டு கொண்டே போகிறது. இந்த மாதிரி ஊழல்களைப் பற்றி எழுதும் போது இதற்கு காரணம் அரசு அதிகாரிகளே என்று துணிந்து எழுதவும். இவ்வளவு உண்மைகளை திரட்டியவர், தயவு செய்து சரியாக புகார் கொடுத்து, ஊழல் செய்தவர்களை தண்டிக்க முயலக் கோரிக்கை. எனக்கெனவோ அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகளே ஊழலில் பன்மடங்கு குற்றவாளிகள் என்று தோன்றுகிறது. குடிமக்கள் தொடர்ந்து முயன்று ஊழல் அதிகாரிகளை களைய வேண்டும்.

Sunday, 6 February 2011

06/02/2011



நல்ல பதிவு.
2-G ஸ்பெக்ட்ரம் குறித்து வேறு வேறான கோணங்களில் நோக்கி பதிவு இடுகிறார்கள்.
இதில் ஊழல் நடந்தது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதில் ஊழல் இல்லை; அரசுக்கு நஷ்டம் எதுவும் இல்லை; லாபமே! என்று கபில் சிபல் கூறுவதும், திராவிட முன்னேற்ற கழகம் கூட்டங்கள் போட்டு முழங்குவதும் ஏமாற்றுவதற்கு ஒரு அளவே இல்லையா? எனவே நினைக்கத் தோன்றுகிறது.

ஒரே பின்னூட்டம் என்னை மேலும் வருத்தப் படச் செய்கிறது.
அவருக்கு: ஐயா! 2-G முதல் ஊழல் அல்ல ; இது போல் பல ஆயிரம் ஊழல்கள் கடந்து போய் இருகின்றன; நம்மை சுரண்டி இருக்கிறார்கள்.
அதில் அம்மாவும் அடக்கம்.
சில ஆர்வலர்களால் , (உரிமை பெறாத கம்பனிகள் கூட இதைச் செய்து இருக்கலாம்; தாம் கொள்ளையில் பங்கு பெறவில்லையே, என நினைத்து) சில உண்மைகள் கசிந்து, ஒரு blogger (திரு கோபாலக்ருஷ்ணன், மலையாள நிரூபர்), சுப்ரமண்யம் சுவாமி, மற்றும் பலர் வெவ்வேறு விதங்களில் உண்மைகளை நீதி மன்றங்கள் மூலமாகவும், வேறு வழிகளிலும் தகவல்களை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தனர்;
இந்த சூழ்நிலை பல ஆயிரம் ஊழல்களுக்கு அமையவில்லை;
இந்த ஊழல் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டு, வருங்காலத்தில் மேலும் பல ஊழல்கள் வெளி வரவும், அந்த பயத்தில் ஊழல்கள் குறையவும் கூடும் என சாதாரண மக்கள் நம்பிக்கை பெற வழி உண்டு.
அம்மா செய்த ஊழல்களும் வெளி வரும். அவரும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும், மீண்டும் இழக்கக் கூடும் தான்.
ஒரு கொலைகாரனை தூக்கில் போட முயலும் பொது, பல கொலைகள் நடந்தன; அவற்றில் கொலைகாரகலூகு தண்டனை தரவில்லை; என்பது என்ன விதத்தில் நியாயம்?http://mahamuthu.blogspot.com/2011/02/blog-post.html

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய ஒரு விரிவான அலசல்.