http://puratchithamizan.blogspot.in/2012/10/blog-post.html
இது ஒரு பக்க காணலாக உள்ளது.
இது ஒரு பக்க காணலாக உள்ளது.
ஒன்று, ஈமு கோழி விவகாரத்தில், பணம் போடுபவர்களைப் பங்குதார்களாகக் காட்டியுள்ளார்கள் என நினைக்கிறேன்.
முதல் போட்டு எந்த, சட்ட விரோதமில்லாத வணிகமும் செய்யலாம். பலர் முதலீடு செய்து ஈமு கோழி வளர்த்து, லாபத்தை பகிர்ந்து கொள்வது சட்டப்படி தவறு இல்லை. உரிமம் கொடுத்தது அந்த தொழிலைத் தொடங்கத்தான்; அவர்கள் எவரிடம் முதல் பெற்று தொழில் செய்வார்கள் என்பது உரிமம் கொடுக்கும் அரசு அதிகாரிக்கு தெரிவிக்கத் தேவை இல்லை. அதைக் கேட்க வேண்டும் என்று இது வரை சட்டம் வரவில்லை.( சட்டம் எழுதும் போது என்னென்ன விதத்தில் ஏமாற்றுக் காரர்கள் உதயமாவார்கள், எப்படி எல்லாம் மக்கள் ஏமாறக் காத்துக் கொண்டு இருப்பர் என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே சட்டத்தில் அடைப்பார்கள்).
கேப்பையில் நெய் வழிகிறது யாரோ பேசிக்கொண்டால் என்றால் பாத்திரம் எடுத்துகொண்டு ஓடும் கூட்டம் இருக்கிறது.
அவர்கள் என்ன வியாபாரம் செய்வார்கள், அவர்களுக்கு இவ்வளவு லாபம் வருமா, நம் பணம் சரியான வழியில் செலவு ஆகுமா, காக்கப் படுமா என்றெல்லாம் எண்ணிப்பார்க்காமல், ஆயிரங்களையும் லட்சங்களையும் முன் பினதெரியாதவர்களிடம் கொடுக்கும் நபர்கள் இருக்கும் போது நாம் யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
நாம் எதற்கெடுத்தாலும் அரசைக் குற்றம் சொல்லிப் பழகி விட்டோம். மக்களின் அறியாமை, அதிக ஆசை போன்றவை தான் இது போன்றவைக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
ஆனால் ஒன்று: சட்டம் ஒரு ஆமை; சட்ட ரீதியாக நடவடிக்கைகள் நீ....ண்ட காலம் இழுத்து அடிக்கும்; குற்றம் செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அச்சம் இல்லாமல் போனதற்கு அரசும் ஒரு காரணம்.
No comments:
Post a Comment