சாதி வாரிக் கணக்கெடுப்பில் மனிதர்கள் சாதி மறுப்போம்!
சாதிகள் ஒழிய வேண்டும்; இதை பலர் வாயால் மட்டும், சிலர் மனத்தாலும் வாயாலும், சிலர் மனத்தால் மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் படிப்போரில் ஒவ்வொருவரும் தம் நிலையை எண்ணி சரி பார்க்கட்டும்.
நான் சாதி வாரி ஒதுக்கீட்டால் பயன் பெற்றவன் இல்லை. ஆனால் சமூக அக்கறை மிகக் கொண்டவன்; சமூகத்தைப்பற்றி எண்ண, கருத்து சொல்ல எனக்கு உரிமை உண்டா எனத் தெரியவில்லை.
அரசின் பணமும், கருவிகளும், கட்டுமானமும் அனைவரின் கூட்டுரிமை என்ற ரீதியில் என் எண்ணங்கள்:
1 சாதிகள் ஒழியும் வரை (ஓர் நூற்றாண்டு குறைந்தது) இப்போது இருக்கும் ஒதுக்கீடு முறை ஆயிரம் ஓட்டைகளுடன் தொடர்வதை விட, சாதி வாரி கணக்கு எடுத்து அதை ஓரளவு சீர் செய்ய முயல்வதே சரி. அதனால் பலன் அனுபவிக்கும் அல்லது தம் சீரிய பங்கை விட அதிகம் பயன் பெரும் கூட்டங்கள் எதிர்க்கும்; மோதல்கள் நிகழும் தான். அதைத் தவிர்க்க முடியாது.
2 சாதிகளை வைத்து அரசியல் செய்யும் கட்சி தலைவர்களுக்கு அவர்களின் சரியான இடம் காட்டப்படவேண்டும்.
3 மண்டல் கமிஷனால் அறிமுகப்படுததப்பட்ட கிரீமி லேயர் - பொருளாதார மேல்தட்டு - அணுகுமுறை தாழ்த்தப்பட்ட குடியினர் பழங்குடியினர், (SC ,ST ) இடையேயும் வருவதே சரியாகும். அதற்கு முன்னோடியாக சாதி வாரி கணக்கு எடுக்கப்பட்டு பொருளாதார, சமுதாய வகைகளை அறிவது சரியே எனத் தோன்றுகிறது .
No comments:
Post a Comment