http://seasonsnidur.wordpress.com/2013/01/01/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5/#comment-807
இஸ்லாமிய ஆண்டுக்கணிப்பு சரித்திரம் அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி.
ஆனால் ஒரு விஷயம்.
இன்றைய விஞ்ஞான ஆய்வுகளின் படி பூமி சூரியனைச் சுற்றுவதற்கு 365 மற்றும் கால் நாட்கள் ஆகின்றன.
ஆங்கிலக் காலண்டர் (ரோமன் காலண்டர் அன்று அறியப்படுவது) இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டே பன்னிரண்டு மாதங்களுக்கு நாட்கள் அமைகப்பட்டு இருக்கின்றன; மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டும் வருகிறது. நான்கு கால் நாட்களை சமன்படுத்த. இந்திய முறையும், சக முறையும் (வட நாட்டில் பயனில் இருப்பது), தமிழ் நாட்டில் உபயோகப்படுத்தும் பஞ்சாங்க முறையும் இந்த சூரியன்-பூமி சுற்றிவைத்து இயங்குவதால், கோடை, குளிர், வசந்த காலங்கள் அந்தந்த பருவத்திலே வருகின்றன.
இஸ்லாமிய முறையிலே, ரம்ஜான் பண்டிகை கோடையிலும் வரலாம்; சில ஆண்டுகளுக்கு பிறகு, குளிர் காலத்திலும் வரலாம். சில ஆண்டுகளுக்கு பின்பு வசந்தத்திலும் வரலாம்; பன்னிரண்டு சந்திர சுற்று என்றால், 360 நாட்களிலே ஓர் ஆண்டு முடிந்து விடுகிறது; அதனால் பூமியின் நிலைக்கு இஸ்லாமியக் காலண்டர் பின் தங்கி போவதால் இப்படி ஆகிறது.
இதை சரி செய்ய குரானிலிருந்து அல்லது குரானுக்கு வெளியே - அல்லாஹ் நம்மை மன்னிக்கட்டும் - ஒரு வழி காண்பது நல்லது
No comments:
Post a Comment