Tuesday, 19 August 2014

http://www.sinthikkavum.net/2014/08/blog-post_17.html?m=0

ஆயிஷாவையும் சொபியவையும் நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார் என்று சொல்லும் மதத்தினர் வேறு எந்த மதத்தினர், கடவுள்களைப் பற்றி பேச லாயக்கு அற்றவர். தெரியாதவருக்கு குறிப்பு: ஆயிஷா என்ற சிறுமி ஆறு வயது; நபி(ஸல்) அவர்களின் நண்பரின் (அபு பக்கர் ) புதல்வி.    நபி(ஸல்) நண்பரின் வீட்டுக்கு போகும் பொது மாமா என்று வாஞ்ஜையுடன் வந்து நின்று வணக்கம் சொல்வது வழக்கம்; ஒரு நாள் நபி(ஸல்) தன் நண்பரிடம் இவளை நான் மண ம் முடிப்பேன் என்றார். அப்போது நபி(ஸல்) வயது 53. நண்பர் ஒரு நிமிடத்தில் தம்மை சமாளித்துக்கொண்டு, சரி, நான் இணங்குகிறேன்: ஒரே ஒரு நிபந்தனை: ஒன்பது வயதுக்குப் பின் தான் உடலுறவு என்றார்; நபி(ஸல்) ஒப்புக்கொண்டார்.  அவளுக்கு அப்போது திருமணம் சுபைர் என்பவருடன் நிச்சச்சயிக்கப்பட்டிருந்தது.  இரு தரப்பு சம்மதத்துடன் அது முறிக்கப்பட்டு ஆறு வயதில் உள்ள பெண்ணுடன் திருமணம்; ஒன்பது வயதில் தாம்பத்தியம்.

சோபியா கதை இன்னும் கொடூரம். ஒரு நாட்டிற்கு படை எடுத்து செல்கின்றனர். அங்கு உள்ள சுல்தான் படை தோற்கடிக்கப்பட்டது.    நபி(ஸல்) வந்தார்; படைத்தலைவர் சொன்னார்; வெற்றி பெற்று விட்டோம்; ஊரைக் கைப்பிடித்தோம் என்றார்.
நபி கேட்டார்: ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளை என்ன செய்தீர்கள்? செல்வம் என்ன ஆயிற்று? தளபதி: ஆண்களைக் கொன்று விட்டோம்; பெண்களையும் குழந்தைகளையும் அடிமை ஆக்கிவிட்டோம்; செல்வம் அனைத்தையும் கைப்பற்றி கட்டி எடுத்துக்கொண்டோம் என்றார். அவர்கள் இவர்கள் என்று காண்பித்தார்.
அப்போது ஒரு நபர் வந்து இன்னும் சில மிக அழகான பெண்களையும் சிறை கொண்டோம் அவர்களை தனியாக வைத்து இருக்கிறார் தளபதி என்று நபி(ஸல்) அவர்களிடத்தில் காதில் சொன்னார்.
நபி(ஸல்) இவர்களைத் தவிர வேறு எவரேனும் உள்ளனாரா? காண்பியுங்கள்
தளபதி: உள்ளனர். மணம் முடிக்கலாம் அடிமையாகக் கைக்கொள்ள வேண்டாம் என்று தனியாக ஒரு பெண்ணை வைத்து இருக்கிறேன்.
நபி(ஸல்) அவளையும் கொண்டு வா
சோபியா கொண்டு வரப்பட்டார். இவள் மிக அழகு.எனக்கு மனைவி ஆகத் தகுதி ஆனவள்.  நான் இப்போதே மணம் முடிப்பேன் என்றார். மணம் செய்தார்.   உடனே முதல் இரவு.   (இத்தத் நூறு நாட்கள் அனுசரிக்கப் படவில்லை; இது குறித்து எந்த ஹடித்திலும் குறிப்பு இல்லை).    தளபதி வெளியில் இரவு முழுவதும் நின்று கொண்டு இருந்தார். நபி(ஸல்) காலை வெளியே வரும் போது நான் உள்ளே என் மனைவியுடன் துயில் கொள்ளும் பொது வெளியே நிற்பது முறையா என்றார்.
அதற்கு தளபதி சொன்னது தான் முத்தாய்ப்பு: சோபியாவின் கணவனையும் தந்தையையும், அண்ணனையும் கொன்ற அன்றே அவளை மணம் முடித்து முதல் இரவு என்பதால் (சோபியா பழி வாங்க நினைத்தால் உங்களுக்கு ஆபத்து என்று) உங்கள் பாதுகாப்பு கருதி வெளியே நின்று கொண்டு கவனிப்பது என் கடமை என்று கருதினேன். நபி (சல் ) ஆறாவது திருமணம்.

நபி(ஸல்) மனைவிகள் மொத்தம் பன்னிரண்டு. ( நபி(ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவிகள் என்ற வரையறை இல்லை; எவ்வளவு பேரை வேண்டுமானாலும் மனம் முடிக்கலாம் என்று அல்லாஹ் (PBUH வஹி இறங்கியது.
பல அடிமைகள்: அடிமைகளுடன் உடலுறவு கொள்வது உரிமை என்று நபி(ஸல்) பல இடங்களில் சொல்லிருக்கிறார்

No comments:

Post a Comment