Monday, 4 May 2015


https://vimarisanam.wordpress.com/2015/05/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/#comment-10484



நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டமும் ஈழப் பிரச்னையில் ஓலமிட்டது போல் ஒரு பக்கக் கூச்சல் ஆகி விட்டது.

அந்தப் பக்கத்தின் நியாயங்களைப் பேசினால்,--இல்லை-- பேசத் துவங்கினால், மோடி பக்தர்கள் என்று வசவு/கேலி.  
:
ஒன்றே ஒன்று சொல்ல முயல்கிறேன்: :  இயந்திரமயம் அதிகரித்ததனாலும், நீர் ஆதாரம் சுருங்கி வருவதாலும், உலக மயம் போன்ற அணுகுமுறைகளாலும்,  விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்;  அல்லது இன்னும் அதிகம் ஆகாது இருக்க வேண்டும்.  வளர்ந்து வரும் கிராம மக்கள் தொகை நகரம் நோக்கி நகர வேண்டிய கட்டாயம்.

  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தொழிற்சாலைகளிலும், சேவைத் துறையிலும் தான் பெருக வாய்ப்பு அதிகம்; ஆகவே தொழில் பெருக வேண்டும்;  புதிய தொழிற் கூடங்கள் வர வேண்டும் -- GDP  யில் விவசாயத்தின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது நாம் அறிந்ததே.

விவசாயத்தைச் சார்ந்த தொழில்கள் வரலாம் தான் (பழங்களைப் பதப் படுத்துதல், காய் கறிகள் சேமித்து வைக்க குளிர் சாதனங்களுடன் பண்டாரங்கள்,  விவசாயப் பண்டங்களை ஆதாரமாக வைத்த ஏற்றுமதிகள் முன்னுரிமை பெற வேண்டும்.)  நீர் வசதி இல்லாத  தரிசு நிலங்களில் என்ன தொழில் துவங்க முடியும்? அப்படித் துவங்க முடியுமானால் புது தொழில்களில் பாதி ராஜஸ்தானிலும், மீதியில் பாதி தெலங்கனா/மரட்வாடா/தமிழகத்தில் நிச்சயம் வரும்.

என்னென்ன தொழில்களை வளர்க்கலாம் முன் உரிமை அளிக்கலாம் என்று அணுகுமுறை நல்லது தான்;  அது  தான் 1991 வரை லைசென்ஸ்-பெர்மிட் ராஜ் என்று இருந்தது.  அரசு அலுவலர்களின் லஞ்சக் கலாச்சாரத்தால் அது எதிர் பார்த்த நன்மைகளை அளிக்கவில்லை.  தாரள மயம் அதன் விளைவே.

Certainly what is required is a balance: land that should be left to continue agriculture and allied sector and for non-agricultural use.

முடிக்கும் முன் ஒரு விண்ணப்பம்; இது மதிப்புக்குரிய பதிவருக்கும் சேர்த்து; நிலங்களை "தாரை" வார்ப்பது என்று எழுத வேண்டாம்.

 நான் Ayn Rand பக்தன் அல்லன்: எனினும், அவர் நூல்களில் ஒன்றில் விவரிக்கும் "தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தம்" செய்தால் நாட்டின் நிலை என்ன என்று ஒரு கணம் சிந்திப்போம்.

No comments:

Post a Comment