Friday, 6 November 2015

சிவானந்த குருகுலம் ‘இந்து’ ஆதரவற்றவர்களா?


https://mathimaran.wordpress.com/2015/11/06/siva-1162/
ஐயா,

வெள்ளைக் காரனைப் பார்த்துதான் இங்கு உள்ள அம்பிகளும் விழித்துக்கொண்டு அனாதை ஆசிரமங்கள் நடத்தத் துவங்கி இருக்கலாம்.  அவர்கள் கிறிஸ்துவ அனாதை இல்லங்களில் கிருஸ்துமஸ், ஈஸ்ட்டர் கொண்டாடுவது போல தீபாவளியை கொண்டாடக் கூடாதா?  மிஷனரிகள் நடத்தும் இல்லங்களில் வளரும் அனாதைப் பிள்ளைகளை  கிறிஸ்தவப் பெயரிட்டு தம் மதத்தில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை என்றால் இதுவும் தவறில்லை தானே?  நம்மூர் பகுத்தறிவுவாதிகளுக்கும்,  மத சார்பின்மை வாதிகளுக்கும் பிற மதத்தவர் செய்வது தவறு இல்லை;  ஆனால் அதையே இந்துக்கள் செய்வது தவறு; கண்டிக்கப் படத் தகுந்தது; பதிவுக்கு பொருள்!

முஹம்மத் அலி ஜின்னா அவர்களுடன் லாவணி பாடுவது கடினம் என்று முந்தைய பதிவுகளின் பின்னூட்டத்தில் கண்டிருக்கிறேன். இருப்பினும், ஒரு விஷயம் மட்டும்.
சிவானந்த குருகுலம் மட்டுமல்ல எல்லா குருகுலங்களிலும் மேல் சாதி, கீழ் சாதி என்று தனிப் பிரிவுகள் இரா.
சொல்லப்போனால், அனாதைகளின் சாதியை யார் அறிவார். அங்கு உள்ள சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் ஒரே வகுப்பாகவே பாவிக்கப் படுவர் என்பது நான் கேட்டது. அவ்வாறு இல்லாமல் சாதி பாகுபாடு பார்க்கும் இல்லங்கள் பற்றி தகவல்கள் இருப்பின் அறிய ஆவலாக உள்ளேன்.

No comments:

Post a Comment