Saturday, 7 November 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.5


http://puthur-vns.blogspot.com/2015/09/5.html

கொஞ்சம் கால தாமதமாக இப்போது தான்  அந்த பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
..//இந்தியை முழுமூச்சாக ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8 ஆம் நாள் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொணர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அகில இந்திய மொழி மாநாடு ஒன்றை கூட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, வங்காளம் மற்றும் அசாமி மொழி பேசும் பிரநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் ‘இந்தி ஆதரவாளர்களுக்கு ஆங்கிலம் எவ்வாறு அந்நிய மொழியோ, அதுபோல இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழி தான்’ என்று முழங்கினார். //

இந்தியை முழு மூச்சாக "ஆதரித்த "  ராஜாஜி  என்பது சரியா?

இரண்டு காரணங்கள்:  (1)  அப்படி அவர் எண்ண ஓட்டம் இருந்தால் இவ்வளவு இந்தி மொழி பேசாத மாநிலங்களைக் கூட்டி மாநாடு நடத்துவாரா?  (2)  முன்பு ஒருமுறை 1936 - 1940 :  காந்தி இந்தியில் எழுதிய கடிதத்திற்கு தமிழில் ராஜாஜி பதில் எழுதியதாகவும் அதுவே காந்தி ராஜாஜிக்கு எழுதிய முதல் மற்று கடைசி இந்தி மடல் என்று படித்து இருக்கிறேன்.

No comments:

Post a Comment