http://smuthukumaran.wordpress.com/2010/08/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/#comment-35
பலவற்றில் முன்னேறி உள்ள தமிழகம் இந்த விஷயத்தில் இரண்டு நூற்றாண்டுகள் பின் தங்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
நான் ஐம்பதுகளிலே, அறுபதுகளிலே பள்ளி, கல்லூரியில் தென் தமிழ் நாட்டில் படித்தவன். அப்போது சாதி பெயரில் இருக்கக் கூடாது; பொது இடத்தில் சாதியைப் பற்றி பேசக் கூடாது; பேசினால் அவமானம் எனக் கருதப்பட்ட காலம். பள்ளியிலே உடன் பயிலும் மாணவனின் சாதி எது என அறிய முற்பட்டால் கேவலம் எனக் கருதிய காலம். ஓரளவு தமிழில் பேசும் பொது கூட குழூஉக்குறி தவிர்த்து சமச்சீர் மொழியில் பேச முயன்ற காலம். கலப்பு திருமணங்கள் சமுதாயத்தில் தலையெடுத்த காலம். அதை எல்லாம் பார்த்து நாங்கள் சில பத்தாண்டுகளிலே சாதி அறவே போய் விடும் என நினைத்த காலம். அப்படியே போகா விட்டாலும், உயர்வு/தாழ்வு என நினைக்க , பேசப் பட மாட்டாது என எண்ணிய காலம்.
ஐயகோ! இப்படி அடைந்திருந்த முன்னேற்றம் மறைந்து இப்போது நாற்பது ஆண்டுகளில் இருநூறு ஆண்டுகள் பின்னேறி இருக்கிறோம்.
தமிழ் சமூகத்திலே நடு நிலையில் நின்று சிந்திக்கிறவர்கள் இந்த சமீப கால நிகழ்வுகளை சீர் தூக்கி பார்த்து, இவ்வாறு ஆனதற்கு காரணங்கள் என, ஒவ்வொரு பகுதியும் ( sections of the society) எந்த விதத்தில் இதற்கு வினை ஊக்கிகளாக இருந்திருக்கிறது , இதை மாற்ற ஒவ்வொரு பகுதியும்/குழுவும் /கூட்டமும் என்ன செய்ய வேண்டும் என கலந்து உரையாட வேண்டும். அரசியல் வாதிகளை கூடியவரை தவிர்த்தல் வேண்டும்.
இந்த பின்னூட்டம் நீண்டு விட்டது. காண்பவர்கள் கருத்து கூறவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Tuesday, 31 August 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment