Monday, 6 December 2010

pinnoottam 7dec 2010:லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்

http://site4any.wordpress.com/2010/11/21/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/#comment-22


நல்ல கருத்து.
லஞ்சம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் கொடுப்பதற்கு சில காரணங்கள்: ஒன்று: அவசரம் அவசியம். ; இரண்டு: சிரமப்படாமல் காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்று சராசரி மனிதன் நினைப்பது; மூன்று: எளிதில் வெளி மனிதன் புரிந்து கொள்ள முடியாமலும், மேலும் அதற்கு செலுத்தவேண்டிய படிவங்கள் சரிவர விநியோகம் ஆகாமலும் பார்த்துக்கொள்ளும் அரசு ஊழியர்.
புது வாகனம் பதிவு செய்து கொள்ள போக்குவரத்து துறை அலுவலகம் சென்றால் அங்கு தேவையான படிவங்கள் இரா; விசாரணை கவுண்டர் என்று ஏதாவது இருக்குமா? புரோக்கர்கள் தான் எங்கும் நிறைந்து இருப்பர்.
பள்ளியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது, வாங்கக் கூடாது என கற்பிப்பது முக்கியம் தான். கூடவே, அரசு அலுவலங்களில், சராசரி நபர் செய்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை மாதிரி படிவத்துடன் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களுடன் கற்பிப்பது அவசியம். உதாரணம்: ராசன் கார்டு செய்து கொள்வது எப்படி? ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி? . முதலியன சொல்லிக் கொடுப்பது அவசியம்.
ஒரு சின்ன யோசனை: சராசரி மனிதனுக்கு வேண்டிய விவரங்களை ஒய்வு பெற்ற அரசு ஊழியரில் எவரேனும் கைப்ரதி வெளியிட்டால் உதவியாக இருக்கும். லஞ்ச ஒழிப்பு குழுக்கள் இதற்கு பண உதவி செய்ய வேண்டும்.










நெற்குப்பை தும்பி

No comments:

Post a Comment