http://nanduonorandu.blogspot.com/2010/12/blog-post_06.html
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐயா அம்பேத்கர் சொன்னதை பதிவு செய்ததற்கு நன்றி.
அதற்குப் பின் சென்ற ஆண்டுகளில் பலப்பல மாற்றங்கள் வந்துள்ளன.
ஐயாவின் எண்ணத் தாக்கத்தால் வந்த நல்ல மாற்றங்களை பதிவு செய்ய வேண்டும்; அவர் கருத்துக்கு மாறாக அரசுகள் நடவடிக்கை எடுத்ததனால் வந்த விளைவுகளை பதிக்க வேண்டும். இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும். அரசியல் சட்டத்தில் ஒதுக்கீடு வந்ததற்கு மூல காரணமான அவர் நினைவு நாளில் அது எந்த அளவுக்கு சமூகத்தில் சமத்துவம் வர அல்லது சமத்துவம் நோக்கி நகர எந்த அளவுக்கு உதவி இருக்கிறது என்று பதிய வேண்டும்.
சனத்தொகை கணக்கெடுப்பு சாதி வாரியாக வந்தால் நடைமுறையில் உள்ள ஒதுக்கீடு முறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சிந்திக்க வழி செய்யும்.
Monday, 6 December 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment