Sunday, 27 March 2011

27/03/2011

பதிவிற்கு "சேவை மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு ஏன் வருவதில்லை?": என்றும் தலைப்பு தரலாம்.
முதலில் உதயமூர்த்தியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
அரசியலுக்கு பொது சேவை மட்டுமே குறிக்கோளாக உள்ளவர் என் வருவதில்லை? நாம் எதாவது செய்ய முடியுமா? இந்த கேள்வியை (என்னைப் போல்) பல நூறு பேர்கள் தினம் தினம் மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அப்போது சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஓரிரு அடிகள் வைக்கிறார்கள். கருத்தொருமித்த நண்பரை அப்போதோ அல்லது அந்த சிந்தனையின் தாக்கம் இருக்கும் ஓரிரு தினங்களுக்குள் சந்தித்தால் தன கருத்துக்களை சொல்லி அவரையும் எண்ணத் தூண்டுகிறார் ; கொஞ்சம் விவாதம்; இது போல் ஓரிரு வாரங்களுக்குள் நான்கைந்து பேருடன் இதே போல் விவாதம்; மிகச்சில முறை இது அடுத்த படிக்கு செல்லும்: அனைவரும் ஒரே இடத்தில் விவாதம்; நெறிப் படுத்தப்படாத விவாதம்; சில கோப்பை தேநீர்; அடிதடியில் முடியவில்லை என்றால் மீண்டும் சுப யோக சுப தினத்தில் மீண்டும் கூடுவோம் என்று தீர்மானம் (இந்தியா-பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று பேசுவதைப் போன்று). கூட்டம் ஒத்திவைப்பு. சுபம்.
இப்போது வலைப் பதிவுலகம் உள்ளதால், உணர்ச்சி வசமாக ஒன்றிரண்டு பதிவுகள்; இருபது-முப்பது பின்னூட்டங்கள்; சுபம்.
கோவைப் பகுதியில் மக்கள் கட்சி பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள். அந்த முயற்சி மென்மேலும் அடுத்தடுத்து அடிகள் வைத்து முன்னேற வாழ்த்துக்கள்.
முடிக்கும் முன்: வேங்கடராமனின் reaction is disappointing. பொறி இயல் கல்வி கூடங்கள், சிறுதொழில் முயற்சிகளை ஊக்கியவர்; தொழிற்பேட்டைகள் அமைய காரணமானவர் என்று பேசப்பட்டவர்;
http://deviyar-illam.blogspot.com/2011/03/blog-post_26.html?showComment=1301224974306#c3543236932024377333

1 comment:

  1. நன்றி. நீங்கள் விரும்பும் இணைப்பு கொடுக்கும் போது லிங்க் என்ற பட்டனை வைத்து தட்டி விட்டால் கொடுத்த இணைப்பு வழியாக உள்ளே சென்று விட முடியும். அடுத்த முறை முயற்சி செய்து பாருங்க.

    ReplyDelete