Thursday, 18 July 2013

தாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத்து..

http://honeylaksh.blogspot.in/2013/07/blog-post_18.html

நன்றி தேனம்மை.
இந்த விஷயம் பல ஆண்டுகளாக என்னை வருத்தி வந்த ஒன்று.  உரையாடுபவர்களிடம் பல முறை ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
தமிழை தவறு இல்லாமல் எழுதவேண்டும் என்ற உணர்வு சிறு வகுப்பிலிருந்து மாணவர்களின் மனதில் படியும் வண்ணம் ஆசிரியர்கள் உணர்த்தவேண்டும்.  அனைவரும் தேர்ச்சி பெறுவர் என்ற முறையில் மதிப்பெண்களுக்கு மரியாதை இல்லை.  இதற்கு முந்தைய தலைமுறை பள்ளியில் படித்தபோது கணிதம் விஞ்ஞானம், ஆங்கிலம் முதலியவற்றில் மதிப்பெண்கள் குறைந்தாலும் தமிழில் குறையக்கூடாது என்ற எண்ணம் கடை மாணவருக்கும் இருந்தது.
மற்றொன்று   செய்தித்தாள்கள் நூல்கள் முதலியவற்றில் இருந்தால் சரியான முறை என்று சொல்லும் வண்ணம் பிழைத் திருத்தம் செய்யப்பட்டது.  இப்போது செய்தித்தாள்களில், குறிப்பாக விளம்பரங்கள் பிழையுடன் வருவதால் எது சரி என்றே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்து விட்டது.  தமிழ் வழிக் கல்வியும் இப்போது அரசு பள்ளிகளில் அதுவும் ஒரு சிறு சதவீதமே என்று ஆகிவிட்டது.  தமிழை பயிற்று  மொழியாகக்  கற்றவர்களுக்கு இருந்த மொழிப்பற்று இப்போது இளைஞர்களிடையே காணப்படுவதில்லை என்று தோன்றுகிறது. 
பொதுவாக உச்சரிப்பைப் பொறுத்தவரை திசைச்சொற்களின் காரணமாகவோ என்னமோ      தமிழர்கள் உச்சரிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  குடிசை என்ற சொல்லை, guடிசை என்றோ kuடிசை என்றோ சொல்லுவோம். குதிரையும் அப்படியே.  இது போல் பலப்பல. தமிழ் ஆசிரியர்கள், தமிழ் விற்பன்னர்கள்  உச்சரிப்பில் ஒருவண்ணம் (uniformity)  என்று  முயல வேண்டும்.

Monday, 22 April 2013

https://othisaivu.wordpress.com/2013/04/20/post-196/#comment-791


அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்!

20/04/201


உங்கள் கட்டுரையில் பெரும்பாலவற்றை வழி மொழிகிறேன். 
சென்னையில் ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்து, சமூக ஆர்வலர்களை வகுப்பு எடுக்க அனுமதிப்பர்  என்றால் வகுப்பு எடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் தமிழ் மீடியத்தில் தமிழ்நாட்டில் B Sc படித்தவன். பணியில் இருந்து ஒய்வு பெற்று பொழுதை நல்ல வழியில் செலவிட விரும்பும் சாமானியன்.  (2) மாலை நேரங்களில் இலவச பயிற்சி வகுப்புக்கள் எடுக்கவும் தயார்.  இந்த வலையின் வாசகர்கள் எழுதுக. இ-மெயில்: nerkuppai.thumbi@gmail.com 

Tuesday, 2 April 2013



TUESDAY, APRIL 02, 2013

மாணவர் போராட்டம்




http://www.badriseshadri.in/2013/04/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+badriseshadri%2FqJsz+%28%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%29


ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அரசியல் உணர்வு/உரையாடல்கள்/விவாதம்/போராட்டம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.  அதே விதத்தில் தமிழகத்திலும் மாணவர்களின் அணுகுமுறை இருக்குமானால் பிரச்னை இல்லை.  மாறாக பத்ரி சொல்லியிருப்பது போல், அது வரவேற்கப்படவேண்டியதே.  ஆனால்,  இது வரை தமிழகத்து கல்லூரிகளில், குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்களின் அணுகுமுறை ஒரு வழிப் பாதையாகவும் மாறுபட்ட எண்ணங்களை செவி மடுத்து, புரிந்துகொண்டு, தர்க்கரீதியாக சரியானவற்றை ஒப்புக்கொண்டு, தம் அடிப்படை அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளத் தேவையான மனநிலையைக் கொண்டதாக ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. எதிர்க் கருத்து சொல்பவர்களை கருங்காலிகள், கைக்கூலிகள் என்று வசை பாடி, வன்முறை காட்டி (அமிலம் வீசுவதும் உண்டு) அவர்களின் வாய் மூடுவதே அதிகம் கண்டிருக்கிறோம்.