Thursday, 18 July 2013

தாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத்து..

http://honeylaksh.blogspot.in/2013/07/blog-post_18.html

நன்றி தேனம்மை.
இந்த விஷயம் பல ஆண்டுகளாக என்னை வருத்தி வந்த ஒன்று.  உரையாடுபவர்களிடம் பல முறை ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
தமிழை தவறு இல்லாமல் எழுதவேண்டும் என்ற உணர்வு சிறு வகுப்பிலிருந்து மாணவர்களின் மனதில் படியும் வண்ணம் ஆசிரியர்கள் உணர்த்தவேண்டும்.  அனைவரும் தேர்ச்சி பெறுவர் என்ற முறையில் மதிப்பெண்களுக்கு மரியாதை இல்லை.  இதற்கு முந்தைய தலைமுறை பள்ளியில் படித்தபோது கணிதம் விஞ்ஞானம், ஆங்கிலம் முதலியவற்றில் மதிப்பெண்கள் குறைந்தாலும் தமிழில் குறையக்கூடாது என்ற எண்ணம் கடை மாணவருக்கும் இருந்தது.
மற்றொன்று   செய்தித்தாள்கள் நூல்கள் முதலியவற்றில் இருந்தால் சரியான முறை என்று சொல்லும் வண்ணம் பிழைத் திருத்தம் செய்யப்பட்டது.  இப்போது செய்தித்தாள்களில், குறிப்பாக விளம்பரங்கள் பிழையுடன் வருவதால் எது சரி என்றே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்து விட்டது.  தமிழ் வழிக் கல்வியும் இப்போது அரசு பள்ளிகளில் அதுவும் ஒரு சிறு சதவீதமே என்று ஆகிவிட்டது.  தமிழை பயிற்று  மொழியாகக்  கற்றவர்களுக்கு இருந்த மொழிப்பற்று இப்போது இளைஞர்களிடையே காணப்படுவதில்லை என்று தோன்றுகிறது. 
பொதுவாக உச்சரிப்பைப் பொறுத்தவரை திசைச்சொற்களின் காரணமாகவோ என்னமோ      தமிழர்கள் உச்சரிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  குடிசை என்ற சொல்லை, guடிசை என்றோ kuடிசை என்றோ சொல்லுவோம். குதிரையும் அப்படியே.  இது போல் பலப்பல. தமிழ் ஆசிரியர்கள், தமிழ் விற்பன்னர்கள்  உச்சரிப்பில் ஒருவண்ணம் (uniformity)  என்று  முயல வேண்டும்.

No comments:

Post a Comment