Monday, 7 December 2015

Comment on An Indian Muslim's Blog: Babri Masjid

A comment made on the blogpost :  https://www.blogger.com/comment.g?blogID=14053277&postID=6966889421889294138&page=0&token=1449498131502&bpli=1

The builder of the Masjid was a Shia; it must have been a mosque, where Shias used to worship. Now the Sunni Muslims who are more vocal, more intolerant (than Shias), and more in number than Shias are making a case for rebuilding it. Maybe, if it is reconstructed as a Shia mosque, ISIS will take care of its demolition, leaving the Ram Janambhoomiwalahs the trouble!

I am a secularist by birth, of course a Hindu. I hate the above comment I am forced to make by the developments: bombings, beheadings, etc.

I loathe Mutual hatred among religions. Till Sunnis and Shias subsume their mutual hatred, the people of other religions, majority Hindus in particular, would never accept that Islam preaches love towards fellow humans.


Charity begins at home. Let the inter-sect wars die, before we point out the intolerance of Hindus and others.

As for Babri Masjid, it is not too late for the Muslims to magnanimously give up their cry for a mosque in the place considered sacred by the Hindus; A masjid can be constructed anywhere, but Ram's birth place can be one and only. Thousands of Masjids are tolerated by Hindus, with their Pukars and all; they will not grudge one more, of course named, Babri Masjid.
07 December, 2015 19:52

Saturday, 7 November 2015

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.5


http://puthur-vns.blogspot.com/2015/09/5.html

கொஞ்சம் கால தாமதமாக இப்போது தான்  அந்த பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
..//இந்தியை முழுமூச்சாக ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1958 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 8 ஆம் நாள் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொணர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அகில இந்திய மொழி மாநாடு ஒன்றை கூட்டினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, வங்காளம் மற்றும் அசாமி மொழி பேசும் பிரநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் ‘இந்தி ஆதரவாளர்களுக்கு ஆங்கிலம் எவ்வாறு அந்நிய மொழியோ, அதுபோல இந்தி பேசாதவர்களுக்கு இந்தியும் அந்நிய மொழி தான்’ என்று முழங்கினார். //

இந்தியை முழு மூச்சாக "ஆதரித்த "  ராஜாஜி  என்பது சரியா?

இரண்டு காரணங்கள்:  (1)  அப்படி அவர் எண்ண ஓட்டம் இருந்தால் இவ்வளவு இந்தி மொழி பேசாத மாநிலங்களைக் கூட்டி மாநாடு நடத்துவாரா?  (2)  முன்பு ஒருமுறை 1936 - 1940 :  காந்தி இந்தியில் எழுதிய கடிதத்திற்கு தமிழில் ராஜாஜி பதில் எழுதியதாகவும் அதுவே காந்தி ராஜாஜிக்கு எழுதிய முதல் மற்று கடைசி இந்தி மடல் என்று படித்து இருக்கிறேன்.

Friday, 6 November 2015

சிவானந்த குருகுலம் ‘இந்து’ ஆதரவற்றவர்களா?


https://mathimaran.wordpress.com/2015/11/06/siva-1162/
ஐயா,

வெள்ளைக் காரனைப் பார்த்துதான் இங்கு உள்ள அம்பிகளும் விழித்துக்கொண்டு அனாதை ஆசிரமங்கள் நடத்தத் துவங்கி இருக்கலாம்.  அவர்கள் கிறிஸ்துவ அனாதை இல்லங்களில் கிருஸ்துமஸ், ஈஸ்ட்டர் கொண்டாடுவது போல தீபாவளியை கொண்டாடக் கூடாதா?  மிஷனரிகள் நடத்தும் இல்லங்களில் வளரும் அனாதைப் பிள்ளைகளை  கிறிஸ்தவப் பெயரிட்டு தம் மதத்தில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை என்றால் இதுவும் தவறில்லை தானே?  நம்மூர் பகுத்தறிவுவாதிகளுக்கும்,  மத சார்பின்மை வாதிகளுக்கும் பிற மதத்தவர் செய்வது தவறு இல்லை;  ஆனால் அதையே இந்துக்கள் செய்வது தவறு; கண்டிக்கப் படத் தகுந்தது; பதிவுக்கு பொருள்!

முஹம்மத் அலி ஜின்னா அவர்களுடன் லாவணி பாடுவது கடினம் என்று முந்தைய பதிவுகளின் பின்னூட்டத்தில் கண்டிருக்கிறேன். இருப்பினும், ஒரு விஷயம் மட்டும்.
சிவானந்த குருகுலம் மட்டுமல்ல எல்லா குருகுலங்களிலும் மேல் சாதி, கீழ் சாதி என்று தனிப் பிரிவுகள் இரா.
சொல்லப்போனால், அனாதைகளின் சாதியை யார் அறிவார். அங்கு உள்ள சிறுவர், சிறுமியர்கள் அனைவரும் ஒரே வகுப்பாகவே பாவிக்கப் படுவர் என்பது நான் கேட்டது. அவ்வாறு இல்லாமல் சாதி பாகுபாடு பார்க்கும் இல்லங்கள் பற்றி தகவல்கள் இருப்பின் அறிய ஆவலாக உள்ளேன்.

Monday, 4 May 2015


https://vimarisanam.wordpress.com/2015/05/04/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D/#comment-10484



நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டமும் ஈழப் பிரச்னையில் ஓலமிட்டது போல் ஒரு பக்கக் கூச்சல் ஆகி விட்டது.

அந்தப் பக்கத்தின் நியாயங்களைப் பேசினால்,--இல்லை-- பேசத் துவங்கினால், மோடி பக்தர்கள் என்று வசவு/கேலி.  
:
ஒன்றே ஒன்று சொல்ல முயல்கிறேன்: :  இயந்திரமயம் அதிகரித்ததனாலும், நீர் ஆதாரம் சுருங்கி வருவதாலும், உலக மயம் போன்ற அணுகுமுறைகளாலும்,  விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்;  அல்லது இன்னும் அதிகம் ஆகாது இருக்க வேண்டும்.  வளர்ந்து வரும் கிராம மக்கள் தொகை நகரம் நோக்கி நகர வேண்டிய கட்டாயம்.

  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தொழிற்சாலைகளிலும், சேவைத் துறையிலும் தான் பெருக வாய்ப்பு அதிகம்; ஆகவே தொழில் பெருக வேண்டும்;  புதிய தொழிற் கூடங்கள் வர வேண்டும் -- GDP  யில் விவசாயத்தின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது நாம் அறிந்ததே.

விவசாயத்தைச் சார்ந்த தொழில்கள் வரலாம் தான் (பழங்களைப் பதப் படுத்துதல், காய் கறிகள் சேமித்து வைக்க குளிர் சாதனங்களுடன் பண்டாரங்கள்,  விவசாயப் பண்டங்களை ஆதாரமாக வைத்த ஏற்றுமதிகள் முன்னுரிமை பெற வேண்டும்.)  நீர் வசதி இல்லாத  தரிசு நிலங்களில் என்ன தொழில் துவங்க முடியும்? அப்படித் துவங்க முடியுமானால் புது தொழில்களில் பாதி ராஜஸ்தானிலும், மீதியில் பாதி தெலங்கனா/மரட்வாடா/தமிழகத்தில் நிச்சயம் வரும்.

என்னென்ன தொழில்களை வளர்க்கலாம் முன் உரிமை அளிக்கலாம் என்று அணுகுமுறை நல்லது தான்;  அது  தான் 1991 வரை லைசென்ஸ்-பெர்மிட் ராஜ் என்று இருந்தது.  அரசு அலுவலர்களின் லஞ்சக் கலாச்சாரத்தால் அது எதிர் பார்த்த நன்மைகளை அளிக்கவில்லை.  தாரள மயம் அதன் விளைவே.

Certainly what is required is a balance: land that should be left to continue agriculture and allied sector and for non-agricultural use.

முடிக்கும் முன் ஒரு விண்ணப்பம்; இது மதிப்புக்குரிய பதிவருக்கும் சேர்த்து; நிலங்களை "தாரை" வார்ப்பது என்று எழுத வேண்டாம்.

 நான் Ayn Rand பக்தன் அல்லன்: எனினும், அவர் நூல்களில் ஒன்றில் விவரிக்கும் "தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தம்" செய்தால் நாட்டின் நிலை என்ன என்று ஒரு கணம் சிந்திப்போம்.

Sunday, 3 May 2015

https://mathimaran.wordpress.com/2015/04/29/bharathi-dasan-1074/#comment-14986



2004   ஆண்டு பதித்தது.  புதிய சரக்கு ஒன்றும் இல்லையா?

இப்படி சரக்கு இல்லாத போதேனும் கொஞ்சம் புதிய விஷயங்களை, புதிய ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் சிந்தனைகள் குறித்து எழுதலாமே.     ஐம்பது, நூறு ஆண்டு சிந்தனைகளை சொற்களைப் பழித்தது போதும்;  கொஞ்சம் இந்த நாளைக்கு ஏற்ற புதிய முயற்சிகள் செயல் திட்டம் பற்றி பதிவுகள் போடுவோமே!
உதாரணமாக தலித் கோடீஸ்வரகள் சங்கம் என்று பேசப்பட்டதே (Dalit MillionairesClub)  அதைப் பற்றி, அதன் தலைவர்கள் வெற்றி பெற்ற முயற்சிகள் அவர்களை ஒட்டி இளைய  தலைமுறைக்கு வழிகாட்டுதல்கள் போன்றவை   பதிவுகள் ஆகுமே.


Monday, 13 April 2015

https://www.blogger.com/comment.g?blogID=4147004509228758889&postID=8242628395256262119&page=1&token=1428921205243::


கம்யூனிசக் கொள்கைகளை  பதிவில், பின்னூட்டத்தில் விவாதிக்க முடியாது தான்.  எங்காவது துவங்க வேண்டு அல்லவா?

இடது   சாரி ஆதரவு குறைந்து வருவதற்கு தர்க்க ரீதியான காரணங்கள் என்ன என்று உங்கள் பகுத்தாய்வு சொல்கிறது: மோடியின் மோடி வித்தை : மக்களை சொல்விளையாட்டால் ஏமாற்றுவது; ( மக்கள் ஏமாந்து விட்டனர்) காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வி;  இதைத் தவிர எதாவது உண்டா? ஜாதி அரசியல் இந்த அளவு இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் ஓங்கி நிற்பதற்கு இடது சாரி பதில் என்ன? ரஷியா, சீனா, போலந்து, செகொலச்லாவாகியா முதலிய நாடுகள் கம்யூனிசத்தை  விட்டு விலகி ஏன் வெகு தூரம் சென்றன?  அந்த தோல்விகளின் படிப்பினை என்ன?  நம்  வர்க்க ,பேதம், போராட்டம், சுரண்டல் அணுகுமுறையை மறு பரிசீலனை செய்து இடது சாரிக் கொள்கைகளை மேம்படுத்தி இருக்கிறோம் என்று எந்த இடது சாரித் தலைவரும் .பேசவில்லை.  பதிவர் சீதாராம் யெச்சூரி பிரகாஷ் காரத் இல்லை தான். இருந்தாலும் கட்சியின் கொள்கையை ஓரளவு சொல்லலாம் அல்லவா?