Thursday, 27 May 2010

28 may 2010

http://karisalkaran.blogspot.com/2010/05/blog-post_24.html

தமிழ் நாட்டிற்கு வெளியிலே பயன் படுத்த முடியாது என்பதாலும், தமிழ் நாடு வேலை வாய்ப்பில் தன்னிறைவு அடையும் காலம் அருகில் இலாத காரணத்தாலும் தமிழில் பொறி இயல் பாடம் தற்போது சரி ஆகாது. தமிழில் பொறி இயல் கற்பிக்க முடியாது என்பது நம் கருத்து அல்ல; நிச்சயமாக கற்றுக்கொடுக்க முடியும் திரு முகிலன் சொல்வது இந்த இடத்தில் சரியே.

சுய சிந்தனைக்கு தாய் மொழியில் கற்பது சிறந்தது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

என்னைக் கேட்டால் (யாரும் கேட்கவில்லை என்பதால் தான் வேறொருவர் பதிவில் பின்னோட்டம்!) , எங்கள் காலத்தில் இருந்தது போல் (எஸ் எஸ் எல் சி : தமிழ் மீடியம்) பத்து வரை தாய் மொழிக் கல்வி; பதினோன்றிலிருந்து, பட்டம் முதலியவை ஆங்கிலம் மூலம். சிறு ஊர்களில் கற்று வந்த என்னைப் போன்ற மாணவர்கள்கொஞ்சமோ நிறையவோ சிரமப் படுவது உண்மை; ஆனால், பதிவர் சொல்வது போல, பட்டம் பெற நினைப்பவர், அந்த கால கட்டத்தைக் கடந்து வந்து, ஆங்கிலத்தில், புரிந்து கொண்டு கற்று, எழுத, உரையாட முடிகிறது.

தமிழையும் சீன மொழியையோ, ஜப்பானிய மொழியையோ,ஜெர்மானிய மொழியையோ ஒப்பீடு செய்தல் மீடியம் என்ற வகையில் பொருளாதாரக் காரணங்களினால் சரியல்ல. தமிழ் இலக்கியங்கள், சமூக இயல் முதலியவை மட்டுமே தமிழ் மீடியத்தில் கற்பது உசிதம் ஆகும். அதே போல, இந்தி திணிப்பையும் கற்கும் மொழி மீடியம் இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்தி திணிப்பு அரசியல்; மற்றும் காலத்தின் கட்டாயம்.

matriculation பள்ளியோ அல்லது வேறு சிஸ்டமோ, தாய் மொழி கல்வி குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு கற்காதவ
ர்கள், தன்னைச் சுற்றி நிலவும் இந்திய சமூக நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல், முட்டாள்களாக இருப்பதை தினம் தினம் காண்கிறேன்.

No comments:

Post a Comment