Monday, 31 December 2012

இஸ்லாமிய ஆண்டுக்கு ஒரு வரலாற்று


http://seasonsnidur.wordpress.com/2013/01/01/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5/#comment-807
இஸ்லாமிய ஆண்டுக்கணிப்பு  சரித்திரம் அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி. 

ஆனால்  ஒரு விஷயம். 

இன்றைய விஞ்ஞான ஆய்வுகளின் படி பூமி சூரியனைச் சுற்றுவதற்கு 365 மற்றும் கால் நாட்கள் ஆகின்றன.
ஆங்கிலக் காலண்டர் (ரோமன் காலண்டர் அன்று அறியப்படுவது) இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டே பன்னிரண்டு           மாதங்களுக்கு  நாட்கள் அமைகப்பட்டு இருக்கின்றன; மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டும் வருகிறது. நான்கு கால் நாட்களை சமன்படுத்த.  இந்திய முறையும், சக முறையும் (வட நாட்டில் பயனில் இருப்பது), தமிழ் நாட்டில் உபயோகப்படுத்தும் பஞ்சாங்க முறையும் இந்த சூரியன்-பூமி சுற்றிவைத்து இயங்குவதால், கோடை, குளிர், வசந்த காலங்கள் அந்தந்த பருவத்திலே வருகின்றன.  

இஸ்லாமிய முறையிலே, ரம்ஜான் பண்டிகை கோடையிலும் வரலாம்; சில ஆண்டுகளுக்கு பிறகு, குளிர் காலத்திலும் வரலாம். சில ஆண்டுகளுக்கு பின்பு வசந்தத்திலும் வரலாம்; பன்னிரண்டு சந்திர சுற்று  என்றால், 360 நாட்களிலே ஓர் ஆண்டு முடிந்து விடுகிறது; அதனால் பூமியின் நிலைக்கு இஸ்லாமியக் காலண்டர் பின் தங்கி போவதால் இப்படி ஆகிறது. 

இதை சரி செய்ய குரானிலிருந்து அல்லது குரானுக்கு வெளியே - அல்லாஹ் நம்மை மன்னிக்கட்டும் - ஒரு வழி காண்பது நல்லது

Saturday, 17 November 2012

மாலேகான், மாலேகான் என்று ஒரே பாட்டை பாடி ஜல்லி அடிக்கும் அன்பர்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்: ஒரு மாலேகான் ஆனால் குறைந்தது நூறு அந்தப் பக்கம்: பம்பாயில் குறைந்தது பத்து; டில்லியில் இருபது; பெங்களூரில் பத்து; காசியில் மூன்று என்று நீளமான பட்டியல் உள்ளபோது, படம் எடுப்பவர்கள் 'வழக்கமாக' என்று மக்கள் கருதுவதைத்தான்  காட்ட முடியும். http://www.sinthikkavum.net/2012/11/blog-post_342.html

Tuesday, 2 October 2012

http://puratchithamizan.blogspot.in/2012/10/blog-post.html

இது ஒரு பக்க காணலாக  உள்ளது.

ஒன்று, ஈமு கோழி விவகாரத்தில், பணம் போடுபவர்களைப் பங்குதார்களாகக் காட்டியுள்ளார்கள் என நினைக்கிறேன்.
முதல் போட்டு எந்த, சட்ட விரோதமில்லாத வணிகமும் செய்யலாம். பலர் முதலீடு செய்து ஈமு கோழி வளர்த்து, லாபத்தை பகிர்ந்து கொள்வது சட்டப்படி தவறு இல்லை.  உரிமம் கொடுத்தது அந்த தொழிலைத் தொடங்கத்தான்; அவர்கள் எவரிடம் முதல் பெற்று தொழில் செய்வார்கள் என்பது உரிமம் கொடுக்கும் அரசு அதிகாரிக்கு தெரிவிக்கத் தேவை இல்லை. அதைக் கேட்க வேண்டும் என்று இது  வரை  சட்டம் வரவில்லை.( சட்டம் எழுதும் போது என்னென்ன  விதத்தில் ஏமாற்றுக் காரர்கள் உதயமாவார்கள், எப்படி எல்லாம் மக்கள் ஏமாறக் காத்துக் கொண்டு இருப்பர் என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே சட்டத்தில் அடைப்பார்கள்).  
கேப்பையில் நெய் வழிகிறது யாரோ பேசிக்கொண்டால்  என்றால் பாத்திரம் எடுத்துகொண்டு ஓடும்  கூட்டம் இருக்கிறது. 
அவர்கள் என்ன வியாபாரம் செய்வார்கள், அவர்களுக்கு இவ்வளவு லாபம் வருமா, நம் பணம் சரியான வழியில் செலவு ஆகுமா, காக்கப் படுமா என்றெல்லாம் எண்ணிப்பார்க்காமல், ஆயிரங்களையும் லட்சங்களையும் முன் பினதெரியாதவர்களிடம் கொடுக்கும் நபர்கள் இருக்கும் போது நாம் யாரைக் குற்றம் சொல்ல முடியும்?

நாம் எதற்கெடுத்தாலும் அரசைக் குற்றம் சொல்லிப் பழகி விட்டோம்.  மக்களின் அறியாமை, அதிக ஆசை போன்றவை தான் இது போன்றவைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. 
ஆனால் ஒன்று: சட்டம் ஒரு ஆமை; சட்ட ரீதியாக நடவடிக்கைகள் நீ....ண்ட காலம் இழுத்து அடிக்கும்; குற்றம் செய்தவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அச்சம் இல்லாமல் போனதற்கு  அரசும் ஒரு காரணம். 

Sunday, 15 April 2012

http://aatralarasau.blogspot.in/2012/04/blog-post_15.html?showComment=1334544887098#c3659324938132134225

சாதி வாரிக் கணக்கெடுப்பில் மனிதர்கள் சாதி மறுப்போம்!

சாதிகள் ஒழிய வேண்டும்; இதை பலர் வாயால் மட்டும், சிலர் மனத்தாலும் வாயாலும், சிலர் மனத்தால் மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் படிப்போரில் ஒவ்வொருவரும் தம் நிலையை எண்ணி சரி பார்க்கட்டும்.

நான் சாதி வாரி ஒதுக்கீட்டால் பயன் பெற்றவன் இல்லை. ஆனால் சமூக அக்கறை மிகக் கொண்டவன்; சமூகத்தைப்பற்றி எண்ண, கருத்து சொல்ல எனக்கு உரிமை உண்டா எனத் தெரியவில்லை.
அரசின் பணமும், கருவிகளும், கட்டுமானமும் அனைவரின் கூட்டுரிமை என்ற ரீதியில் என் எண்ணங்கள்:
1 சாதிகள் ஒழியும் வரை (ஓர் நூற்றாண்டு குறைந்தது) இப்போது இருக்கும் ஒதுக்கீடு முறை ஆயிரம் ஓட்டைகளுடன் தொடர்வதை விட, சாதி வாரி கணக்கு எடுத்து அதை ஓரளவு சீர் செய்ய முயல்வதே சரி. அதனால் பலன் அனுபவிக்கும் அல்லது தம் சீரிய பங்கை விட அதிகம் பயன் பெரும் கூட்டங்கள் எதிர்க்கும்; மோதல்கள் நிகழும் தான். அதைத் தவிர்க்க முடியாது.
2 சாதிகளை வைத்து அரசியல் செய்யும் கட்சி தலைவர்களுக்கு அவர்களின் சரியான இடம் காட்டப்படவேண்டும்.
3 மண்டல் கமிஷனால் அறிமுகப்படுததப்பட்ட கிரீமி லேயர் - பொருளாதார மேல்தட்டு - அணுகுமுறை தாழ்த்தப்பட்ட குடியினர் பழங்குடியினர், (SC ,ST ) இடையேயும் வருவதே சரியாகும். அதற்கு முன்னோடியாக சாதி வாரி கணக்கு எடுக்கப்பட்டு பொருளாதார, சமுதாய வகைகளை அறிவது சரியே எனத் தோன்றுகிறது .

SUNDAY, APRIL 15, 2012 கல்வி உரிமைச் சட்டம்

www.badriseshadri.in 15/04/2012

பதிவில் சொல்லியவை மிகச்சரி.
இருபத்தைந்து சதவீத மாணவர்கள் வேறு அரசு/அரசு முழு உதவி பெற்ற பள்ளிகளிலிருந்து வருவார்கள். அவர்களுக்கு பயிற்று மொழி (மீடியம்) சங்கடம் ஒன்று; தரத்தில் பெரும்பான்மை மாணவர்களின் நிலைக்கு உயர்ந்து அந்த பள்ளியின் படிக்கும் சிறப்புக்களை அடைய செய்ய வேண்டிய ப்ரிபறேஷன். அது தவிர அங்கு படிக்க வருவதென்றால் சீருடை போன்ற செலவுகள்.
கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்கள் இந்த மாணவர்களை ச்வீகாரம் செய்து கொண்டு சுமார் மூன்று ஆண்டுகள் உழைத்து அவர்களை பிற மாணவர்களின் நிலைக்கு உயர்த்த முயலலாம்.
இன்னும் சில தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளில் கற்கும் மூன்றாம் தர மாணவர்களை நேரடியாக படிப்பை தொடர்ந்து, முடிக்க உதவி செய்யலாம்.
குழப்ப நிலை தெளிவு பெற்ற உடன், அருகில் உள்ள ஒரு பள்ளியில் சேரும் ஒன்று அல்லது ஆறாம் வகுப்பு மாணவர்களை ச்வீகாரம் செய்துகொண்டு அவர்களுக்காக உழைக்க (முயல) நான் தயார்.

Tuesday, 14 February 2012

pinnoottam: 15/02/2012http://www.kazhuku.com/2012/02/blog-post_13.html

தமிழர்களின் நீண்ட கால நல்வாழ்வு குறித்து சிந்திக்கும் எவரும் கழுகு போன்றே எண்ணுவர். வேறு மூன்றாவது அணி வந்து தமிழகத்தை மாற்றாதா என ஏங்குபவர் அநேகம். // திமுக அல்லது அதிமுக இல்லாத, காங்கிரசைச் சாராத, மதவாதம் இல்லாத...

வேறு ஒரு கட்சியை நாம் ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது....?// எந்த கட்சிகள் மிஞ்சின? இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் சேராத கட்சி எது? சென்ற தேர்தலுக்கு முன்பு வரை தே மு தி க., சென்ற தேர்தலின் போது ம தி மு க. கட்சித் தலைவர் என்று பார்த்தால் வைகோ மக்களின் அபிமானம் பெற்றவர் தான்; ஆனால் கட்சியின் குரல் தமிழகத்து தமிழர்களுக்காக ஒலிக்க வேண்டும்; ஈழத்து தமிழர்களும் தமிழர்களே ஆனாலும் அவர்களின் பிரச்னை முதல் இடம் பெற இயலாது என்பதை பாராளுமன்றத் தேர்தலின் போது கண்டோம். (ஆயிரக்கணக்கானவர் சுட்டு பொசுங்கும் போது இங்கு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது; ஈழம் முடிவுகளில் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வரவில்லை. (இதோ இன விரோதி என்று கத்தும் பின்னூட்டங்கள் வரும். ஆனால் உண்மை நிலை இது தான் என்று நம்புகிறேன்).

அதாவது : வைகோ ஈழத்தை மையப் படுத்தி பேசுவதைத் தவிர்த்து முல்லைப் பெரியாறு போன்ற பிரச்னைகளை சரியாக கையாண்டு தமிழர் நலம் பேணும் கட்சி என்று அடையாளம் காணப்பட வேண்டும். அது மாற்றுக் கட்சியாக அமைய வாய்ப்பு உள்ள கட்சி என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். மாநிலம் முழுதும் தனித்து போட்டியிட பணபலம் வேண்டும். கூட்டணி இல்லாமல் முடியுமா? முயற்சிக்கலாம் .

15 Feb 2012

posted by dondu(#111686 http://dondu.blogspot.in/ 74346665545885) atDondus dos and donts -

நூல் விமரிசனம் என்ற வரை உங்கள் மதிப்புரை நன்கு அமைந்துள்ளது; அப்புத்தகத்தை நாம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது.

சாதிப் பிரச்னைமீது சர்ச்சை குறைந்துவிட்டது போலவே தோன்றுகிறது.

சில கோணங்களில் பின்னூட்டங்கள் வந்திருந்த போதும், முழுமையான விவாதம் இல்லை. சுருக்கம் இவ்வாறு இருக்கலாம்: இஸ்லாமியர்களில் சாதிகள் உள்ளன; ஆனால் இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப பின் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளன.
இந்துக்கள் இடையிலும் புலம் பெயர்ந்து சென்றவர்கள்மத்தியில் (பிராமணர்கள் தவிர) சாதியின் தாக்கம் குறைவு; காலப் போக்கில் அழிந்து போகும் சாத்தியம் உள்ளது. குறிப்பிடத்தக்க சதவீதம் சாதிகள் ஒழியவேண்டும் (இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது மாறும்/ மாற வேண்டும் ) என்ற எண்ணம் காணப் படுகிறது. அது பிராமணர்கள் இடையே குறைவு. தங்களின் பதிவின் கருவே சாதிகள் ஒழியா (து) என்ற எண்ண ஓட்டத்தை தாங்கிப் பிடிப்பதைக் காண சற்று சங்கடமாக உள்ளது.

Thursday, 26 January 2012

பொழுது எப்படி போகுதுங்க?

http://swamysmusings.blogspot.com/2012/01/blog-post_25.html

சிந்திக்க வைத்த பதிவு.
மிக விரைவிலே ஒய்வு பெறப் போகும் நான் இந்த பதிவின் மையக் கருவான " எப்படி பொழுது போகிறது ?" என்று பலரை கேட்டிருக்கிறேன்.
அவர்கள் குறிப்பாக பொதுப்பணி ஆற்றவில்லை என்றால் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாமல் கொஞ்சம் சலிப்படைவது உண்டு. ஆனால், அவர்களுக்கு நம்மால் ஆனா வரை பொதுப்பணி ஆற்றி நேரத்தை ஓரளவு நல்ல விதத்தில் செலவு செய்யலாமே என்று சுட்டிக் காடியிருக்கிறேன். நாம் என்ன கூவத்தை மணம் வீசச் செய்ய முடியுமா என்று கேட்போர் உண்டு.
தொடர்ந்த உரையாடலில், ஒவ்வொரு நபரும் தன அளவுக்கு சிறு பணிகள் செய்ய இயலும்; உங்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கும் பெண்மணியின் குழந்தைகளுக்கு இலவசமாக் பாடம் கற்பிக்கலாமே? நீங்கள் மாநகராட்சியில் பணி செய்தவர் என்றால், வீட்டு வரி செலுத்துவது, சிறு கடை வைக்க எந்தவிதம் உரிமம் வாங்க வேண்டும் என்று சொல்லி உதவி செய்யலாமே, நாம் தான் வேலை செய்யும் காலங்களில் என்பது-தொண்ணூறு சதவீதம் தான் வேலை செய்துவிட்டு , இப்போது ஓய்வூதியம் பெறுகிறோமே; என்பது போன்று பாங்காக சொல்லி, அவர்களை சிந்திக்க வைத்து இருக்கிறேன்.
ஒருவர் சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் என்னைக் காண வந்தார்; இப்போது நான்கு சிறுவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறேன்; அவர்களில் இரண்டு பேரின் கல்விச் செலவை முழுதுமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்; இப்போது மனம் மிக நல்ல நிலையில் உள்ளது; இரத்த அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக உள்ளேன்; உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று சொல்லிச் சென்றார்.
இந்த பின்னூட்டத்தை பின்னர் தான் பார்த்தேன். என் பின்னூட்டம் இந்தக் குறையைத் தீர்த்திருக்கும் என நினைக்கிறேன்.