Saturday, 14 May 2011

15/05/2011

http://www.inneram.com/2011032614903/vaikos-politics

பழைய பதிவு இப்போது தான் காண நேர்ந்தது.
தேர்தலுக்குப் பின் தி மு கவின் நிலை பரிதாபம். கலைஞரின் குடும்பச் சொத்து ஆனதின் விளைவு இப்போது கழக அனுதாபிகளுக்கு ( திமுகவை முதலாகவும், கலைஞரை அதற்கப்புறமும் நேசித்தவர்கள்) தவிப்பர். பெரிய மனது பண்ணி கலைஞர் ஓய்வே பெற்றுக் கொண்டாலும் ஸ்டாலினை நம்பி கழகத்தை ஒப்படைக்கக் கூடாது. அல்லது கலைஞரின் குடும்பத்திலிருந்து கழகத்தை பிடுங்கி குடும்பத்திற்கு அப்பாற்பட்டவர் தலைவராவது நலம் பயக்கும். வைகோவின் ம.தி மு க இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெளிவாகக் காட்டிவிட்டார்கள். வைகோ திமுகவின் தலைமை தாங்கி சீர்படுத்தட்டும். நெற்குப்பை தும்பி

Friday, 13 May 2011

14/05/2011

1. http://sengovi.blogspot.com/2011/05/blog-post_14.html
பாராளு மன்றத் தேர்தலில் வாக்கு குறைந்த போது, course correction போன்று, தம் மூன்று ஆண்டு ஆட்சியின் நடவடிக்கைகளை மறு நோக்கு செய்து, மின்சார வெட்டு முதலிய பிரச்னைகளுக்கு அணுகுமுறை மாற்றம், தாம் ஒய்வு எடுத்துக்கொண்டு இளைய தளபதிக்கு நாற்காலியை விட்டுக் கொடுத்து இருந்தால் கூட இந்த அளவுக்கு (அவையில் விஜயகாந்த் எதிர் கட்சித் தலைவர் ஆவதை காண்பது) அவமானம் ஆகி இருக்காது .
நாம் என்ன வேணாலும் செய்யலாம்; மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்கிற திமிர்/தெனாவட்டு க்கு சரியான ஆப்பு.
2. idlyvadai.blogspot.com
தி.மு.க மீது வளர்ந்து கொண்டிருந்த வெறுப்புக்கு last feather on the camel's back ஆக 2G spectrum வந்தது.
ஆனால் மக்களவையில் தி மு கவை தே மு தி கவை விட குறைவான இடங்களைப் பெரும் அளவுக்கு அமுக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் மட்டும் தான் மே மாதம் பதிமூன்றாம் தேதி ஜே முதல் அமைச்சாராகவும் , காப்டன் எதிர் கட்சித் தலைவராகவும் சந்திப்பர் என்று கோவையில் சொன்னார்; அது சரியாகப் போயிற்று. இட்லிவடை பதிவுக்கு பின்னூட்டம். 14 may 2011

Wednesday, 11 May 2011

12/05/2011

http://www.thamilnattu.com/2011/05/1.html

தமிழகத்து தமிழர்களுக்கு ஈழத்து பிரச்னைகள் தெரியாது, ஆனால் அவர்கள் இலங்கையில் சிங்களர் பெருவாரியான ஆட்சியின் கொடுமைகளை பேசுகிறார்கள் என்று பல முறை எண்ணியதுண்டு. ஈழம், மலை, கொழும்பு பிரிவுகள் பற்றியே ஓரளவு தெரியும். ஆனால் அங்கிருந்த சமூக பிரிவுகளைப் பற்றி படித்ததில்லை.
தமிழ் நாட்டுத் தமிழர்கள், அரசியல் கட்சிகளின் விடா முயற்சிகளையும் கடந்து சாதிப் பிரிவுகளை ஓரளவு குறைக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால், இலங்கையில் இந்த அளவுக்கு இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. அன்னியர் (சிங்களவர் என்ற பொருளில்) அடக்கி வைத்துள்ளபோது, விடுதலைக்கு அல்லது தமிழர் உரிமைக்காக போராடும் காலத்தில் கூட இது போன்ற சமூக பிரிவுகள் மேலோங்கி நின்றது /நிற்பது அதிர்ச்சியே.
இது போன்ற பதிவுகளை, தமிழ் நாட்டு வலைஞர்கள் காணுவார்கள் என நம்புகிறேன்.
சாதி பிரிவு என்பது "வட நாட்டு பார்ப்பனர்கள் கொண்டு வந்த சகதி, சாதி பிரச்னைக்கு பார்ப்பனரே காரணம்" என்று இந்த நூற்றாண்டிலும் கத்திக் கொண்டிருக்கும் கலைஞர்களும் வலைஞர்களும் கண்டு, இங்குள்ள "பார்ப்பனர்" குறித்து தம் கண்ணோட்டத்தை
திருத்திக் கொள்வர் என நம்புகிறேன்.

Thursday, 14 April 2011

14/04/2011

http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html
இலங்கை தமிழர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை; ஏற்றத் தாழ்வு உண்டு என்று தெரியும் (பெரும்பாலனவர்க்கு தெரியாது). அதன் பரிமாணங்களை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை.
பல முறை பின்னூட்டங்களில் எழுதி உள்ளேன்: ஈழத் தமிழர்களுக்கு இலங்கையில் உள்ள பிற தமிழர்களிடையே ஆதரவு இல்லாத நிலையில் அவர்கள் இந்தியாவின் தமிழர்களை குறை சொல்வது சரியா? நெடுமாறன்களும், சீமான்களும், வைகோகளும் இது குறித்து தெளிவாக அறிந்து அவர்களுக்குளே ஒற்றுமையை ஏற்படுத்த எந்த வித முயற்சியையும் செய்யவில்லை. ஈழத் தமிழர்கள் என்பதும் இலங்கை தமிழர்கள் என்பதும் ஒன்றல்ல என்று சோ போன்றோர் சொன்னால் நாம் சீரணித் துக்கொள்வது இல்லை.
இரண்டு: அவர்களுக்கு நடுவே உள்ள சாதி வேறுபாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இங்கு தான் பார்ப்பனர்கள் கெடுத்தார்கள் என்று ஓயாமல் கத்துகிறோம். குமரிக்காண்டம் இருந்தபோது பார்ப்பனர்கள் இங்கு வரவே இல்லையே; அப்புறம் சாதி எங்கிருந்து வந்தது?
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்களை இழுக்காதீர்கள்.

Sunday, 27 March 2011

27/03/2011

பதிவிற்கு "சேவை மனப்பான்மை உள்ளவர்கள் அரசியலுக்கு ஏன் வருவதில்லை?": என்றும் தலைப்பு தரலாம்.
முதலில் உதயமூர்த்தியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
அரசியலுக்கு பொது சேவை மட்டுமே குறிக்கோளாக உள்ளவர் என் வருவதில்லை? நாம் எதாவது செய்ய முடியுமா? இந்த கேள்வியை (என்னைப் போல்) பல நூறு பேர்கள் தினம் தினம் மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அப்போது சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஓரிரு அடிகள் வைக்கிறார்கள். கருத்தொருமித்த நண்பரை அப்போதோ அல்லது அந்த சிந்தனையின் தாக்கம் இருக்கும் ஓரிரு தினங்களுக்குள் சந்தித்தால் தன கருத்துக்களை சொல்லி அவரையும் எண்ணத் தூண்டுகிறார் ; கொஞ்சம் விவாதம்; இது போல் ஓரிரு வாரங்களுக்குள் நான்கைந்து பேருடன் இதே போல் விவாதம்; மிகச்சில முறை இது அடுத்த படிக்கு செல்லும்: அனைவரும் ஒரே இடத்தில் விவாதம்; நெறிப் படுத்தப்படாத விவாதம்; சில கோப்பை தேநீர்; அடிதடியில் முடியவில்லை என்றால் மீண்டும் சுப யோக சுப தினத்தில் மீண்டும் கூடுவோம் என்று தீர்மானம் (இந்தியா-பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று பேசுவதைப் போன்று). கூட்டம் ஒத்திவைப்பு. சுபம்.
இப்போது வலைப் பதிவுலகம் உள்ளதால், உணர்ச்சி வசமாக ஒன்றிரண்டு பதிவுகள்; இருபது-முப்பது பின்னூட்டங்கள்; சுபம்.
கோவைப் பகுதியில் மக்கள் கட்சி பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள். அந்த முயற்சி மென்மேலும் அடுத்தடுத்து அடிகள் வைத்து முன்னேற வாழ்த்துக்கள்.
முடிக்கும் முன்: வேங்கடராமனின் reaction is disappointing. பொறி இயல் கல்வி கூடங்கள், சிறுதொழில் முயற்சிகளை ஊக்கியவர்; தொழிற்பேட்டைகள் அமைய காரணமானவர் என்று பேசப்பட்டவர்;
http://deviyar-illam.blogspot.com/2011/03/blog-post_26.html?showComment=1301224974306#c3543236932024377333

Sunday, 13 February 2011

pinnoottam 13/02/2011

நல்ல பதிவு. தமிழ்ப் பற்று உள்ளவர்களே தமிழை வளர்க்கவும், குறைந்தது நலிந்து கோளாமல் இருக்கவும் முயல்வார்கள் எனலாம்.
தமிழ்ப் பற்று என்பது தமிழை பயிற்று மொழியாக உயர்நிலைப்பள்ளி வரை படித்தவர்களுக்கே இருப்பதைக் காண முடிகிறது. எழுபதுகளுக்குப்பின், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகமாகி, ஆங்கில பயிற்று மொழியில் கற்பவர்களே மிக அதிகம் ஆகிவிட்டனர். இவர்களில் பெரும்பாலோனார் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வீட்டிற்குள் அதுவும் தாயிடம் பேசுவது மட்டுமே தமிழாக இருக்கிறது என நினைக்கிறேன். அவர்கள் சிந்திப்பது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் நினைக்கிறேன். எண்பதுகளில், தொண்ணூறுகளில் பள்ளி பயின்றோர் இது குறித்து கருத்து தெரிவித்தால் நன்றி உடையனவனாக இருப்பேன். http://valaakam.blogspot.com/2011/02/blog-post.html

Wednesday, 9 February 2011

09.02.2011

http://www.maattru.com/2011/02/blog-post_3135.html
இது போல் இன்னும் எவ்வளவு ஊழல்களோ?
தலித்துகள் முன்னேற வேண்டும் என்று அழகாக காகிதத்தில் திட்டங்கள் தீட்டி, பணம் அரசிடமிருந்து கறந்து, பொய் ஆவணங்கள் தயார் செய்து இதை ஒவ்வொரு வருடமும் செய்து, என்று நீண்டு கொண்டே போகிறது. இந்த மாதிரி ஊழல்களைப் பற்றி எழுதும் போது இதற்கு காரணம் அரசு அதிகாரிகளே என்று துணிந்து எழுதவும். இவ்வளவு உண்மைகளை திரட்டியவர், தயவு செய்து சரியாக புகார் கொடுத்து, ஊழல் செய்தவர்களை தண்டிக்க முயலக் கோரிக்கை. எனக்கெனவோ அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகளே ஊழலில் பன்மடங்கு குற்றவாளிகள் என்று தோன்றுகிறது. குடிமக்கள் தொடர்ந்து முயன்று ஊழல் அதிகாரிகளை களைய வேண்டும்.

Sunday, 6 February 2011

06/02/2011



நல்ல பதிவு.
2-G ஸ்பெக்ட்ரம் குறித்து வேறு வேறான கோணங்களில் நோக்கி பதிவு இடுகிறார்கள்.
இதில் ஊழல் நடந்தது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதில் ஊழல் இல்லை; அரசுக்கு நஷ்டம் எதுவும் இல்லை; லாபமே! என்று கபில் சிபல் கூறுவதும், திராவிட முன்னேற்ற கழகம் கூட்டங்கள் போட்டு முழங்குவதும் ஏமாற்றுவதற்கு ஒரு அளவே இல்லையா? எனவே நினைக்கத் தோன்றுகிறது.

ஒரே பின்னூட்டம் என்னை மேலும் வருத்தப் படச் செய்கிறது.
அவருக்கு: ஐயா! 2-G முதல் ஊழல் அல்ல ; இது போல் பல ஆயிரம் ஊழல்கள் கடந்து போய் இருகின்றன; நம்மை சுரண்டி இருக்கிறார்கள்.
அதில் அம்மாவும் அடக்கம்.
சில ஆர்வலர்களால் , (உரிமை பெறாத கம்பனிகள் கூட இதைச் செய்து இருக்கலாம்; தாம் கொள்ளையில் பங்கு பெறவில்லையே, என நினைத்து) சில உண்மைகள் கசிந்து, ஒரு blogger (திரு கோபாலக்ருஷ்ணன், மலையாள நிரூபர்), சுப்ரமண்யம் சுவாமி, மற்றும் பலர் வெவ்வேறு விதங்களில் உண்மைகளை நீதி மன்றங்கள் மூலமாகவும், வேறு வழிகளிலும் தகவல்களை பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தனர்;
இந்த சூழ்நிலை பல ஆயிரம் ஊழல்களுக்கு அமையவில்லை;
இந்த ஊழல் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டு, வருங்காலத்தில் மேலும் பல ஊழல்கள் வெளி வரவும், அந்த பயத்தில் ஊழல்கள் குறையவும் கூடும் என சாதாரண மக்கள் நம்பிக்கை பெற வழி உண்டு.
அம்மா செய்த ஊழல்களும் வெளி வரும். அவரும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும், மீண்டும் இழக்கக் கூடும் தான்.
ஒரு கொலைகாரனை தூக்கில் போட முயலும் பொது, பல கொலைகள் நடந்தன; அவற்றில் கொலைகாரகலூகு தண்டனை தரவில்லை; என்பது என்ன விதத்தில் நியாயம்?http://mahamuthu.blogspot.com/2011/02/blog-post.html

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய ஒரு விரிவான அலசல்.

Saturday, 22 January 2011

24/01/2011

http://eppoodi.blogspot.com/2011/01/blog-post_22.html#comment-form
சித்ரா சொன்னது போல் ........ விடுமுறை தினங்களில் வரும் நிகழ்ச்சிகள் பட்டிமன்றமா இல்லையா என ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.
இலக்கியத் தரம் வாய்ந்த பட்டிமன்றங்களை அறுபதுகளில் ரசித்த எம்மைப் போன்றவர்க்கு கொஞ்சமும் பிடிக்கா
வண்ணம் இவை யுள்ளன.

பழைய, புதிய என்று கோடு போட்டு பிரிப்பதே சரி இல்லை. . த்யாகராஜ பாகவதர் பழையவர், எனக்கு T M S, சுசீலா சமகாலத்தவர்; எஸ் பி பாலசுப்ரமன்ய்மும், இளையராஜவுமே புதியவர்கள் தொண்ணூறுகளில் அதிகமாய் கேட்டவர்க்கு இளையராஜா பழையவர்; ரஹ்மான் புதியவர்; அடுத்த"தலைமுறைக்கு" இது போல் மாறும்.

காலப் போக்கில் வரிகளுக்கு முக்கியம் குறைந்து, இசைக்கு முன் மரியாதை வந்ததை மறுக்க முடியாது.

Monday, 10 January 2011

கொஞ்சம் வித்தியாசனமான பதிவு.
இரண்டு கழகங்களை விட்டால் வேறு நாதி இல்லாமல் இருக்கிறோமே என்று அங்கலாய்க்கும் பதிவுகள் ஏராளம்.
ஒரு சில காப்டனுடன் காங்கிரஸ் சேர்ந்து மூன்றாம் அணி என்று கூட கண்டிருக்கிறேன்.
இது வரை கூட்டணி விட்டு கூட்டணி தாவிக்கொண்டிருந்த மருத்துவர் ஒரு அணியை அமைக்கலாம் என்று இது வரை எழுதிக் காணவில்லை; அவர்களே அப்படி நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இது போல் அவர்களும் சிந்திக்கலாம்.
ஆனால் ஒன்று: மருத்துவர் இது வரை நீண்ட காலத் திட்டங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட பிரச்னைகளைப் பற்றியே பேசியதாக நினைவு.: பொறி இயல், மருத்துவ கல்விக்கு பொது தேர்வு வேண்டாம்; கிராமப் புற மாணவர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்; மது விலக்கு; பொருளாதார முன்னேற்றத்தில் வன்னியர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை; போன்ற சில.
விவசாயத்தை, மேலும் விவசாயிகளின் முன்னேற்றம், அவர்கள் நிலங்களை கையகப் படுத்தினால் அவர்களுக்கு தர வேண்டிய ஈட்டு தொகை; தொழில் மேன்பாடு; கிராமங்களில் கல்வி வசதி, மருத்துவ வசதி, வணிகத்தில் தமிழகம் என்னென்ன செய்யலாம் ; பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தருவதா வேண்டாமா,
ஆங்கிலக் கல்வி/தாய் மொழி கல்வி, சிறு தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, போன்ற விஷயங்களில் தொலை நோக்குடன் கொள்கைகள்/அணுகுமுறை எனப் பல கூறலாம்.
ஏதாவதொரு கூட்டணியிலேயே இருந்ததால், அந்த அணியின் கொள்கைகளை விட்டு புதிய அணுகுமுறையை அழுத்திச் சொல்ல முடியாத நிலை இருந்தது உண்மை தான். அது இப்போது செய்யப்பட வேண்டும். வரும் தேர்தலில் இல்லையெனில், அடுத்த தேர்தலில் பெரும்பான்மை என நினைத்து செயல் பட வேண்டும்.
மிகப் பெரிய விஷயம்: ஊழல் குறித்து அதை களைவதைப் பற்றி சிறப்பான அணுகுமுறையைக் காட்ட வேண்டும். சிந்தனை தமிழகம் முழுதுக்குமானதாக அதாவது, வன்னியர்/வட தமிழகம் என்று குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளி வர வேண்டும்.
அதாவது பிள்ளையார் சுழியில் இருந்து துவங்க வேண்டும். எண்ணம் செயல்பட வாழ்த்துக்கள். 10/01/2011

nerkuppai thumbi said...

Saturday, 8 January 2011

08/01/2011

http://moonramsuzhi.blogspot.com/2011/01/blog-post_08.html


நல்ல பதிவு. நன்றி.
சில புதிய விவரங்கள் தெரியப்பெற்றேன்.
இந்த ஜல்லியடி அறுபதுகளில், எழுபதுகளில் , உயர்நிலை வகுப்புகளில் இருந்தவருக்கு மட்டுமே புரியும். அதற்கு பிற்காலம், தமிழ் மீடியம் குறைந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில மீடியம் மிகுந்ததால் தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் போன்ற வசனங்கள் கேட்டிருக்கமாட்டர்கள். இப்போதும் வலை உலகில் (பயன் படுத்துவோர் முப்பது நாற்பது சில்லறை அகவை இருப்போர் அதிகம் என நினைக்கிறேன்) இந்த அளவு ஜல்லியடி இருப்பது எனக்கு ஆச்சரியமே.
அறுபத்தேழில் பள்ளி முடித்த எனக்கு, பதிவர் சொன்ன அனுபவங்கள் இல்லை. ஒரே தமிழ் ஆசிரியர் - நடு நிலை எண்ணங்கள், இறைப் பற்றுடன்.
நெற்குப்பை தும்பி

Thursday, 6 January 2011

07/01/2011 Dr Kandaswamy's blog

ஒன்று: பரிசோதனைச் சாலைக்கு தணிக்கைக்கு வரும் அதிகாரிகளுக்கு வேதி இயல் தெரிந்து இருந்தால் நலம். அவர்கள் சரித்திரத்தில் இளங்கலை படித்திருந்தால், ஆசிட் என்றால் அவர்களுக்கு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால் வயிற்றில் ஆசிட் என்பார்களே அது என எண்ணுவார்கள். ( அரசு அதிகாரிகள் தனக்கு தெரியாததை இன்னொருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்வதில்லை. தமக்கு தெரியாதது இந்த உலகத்தில் இல்லை; அப்படி எதாவது இருந்தால் அது உபயோகமற்றது என்று எண்ணம். மேலும், தமக்கு தெரியாதது என்று காட்டிக் கொள்ளக் கூடாது என்று பயிற்றுவிக்கப் பட்டு உள்ளனர் போலும்!)
இரண்டு: ஜாடிக்கு கணக்கு கேட்கத் தெரிந்தவர், வாங்கிய அளவே அதிகமா, சரியானதா, என சரி பார்க்க வேண்டும்; சரியான விலையில்,, சரியான விதி முறையைப் பின்பற்றி வாங்கப் பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு ஜாடிக்கு கணக்கு கேட்டுக்கொண்டு இருந்தால் இங்கு உள்ளவர்களும், டப்பாவையோ, ஜாடியையோ காட்டி திசை திருப்புவது எளிது.
மூன்று: காபி, டிபன் , (அசைவ) சாப்பாடு முதலியவற்றுடன் (முன்பெல்லாம் வேறு மாநிலங்களில் "திரவ உணவு", இப்போது மது விலக்கு இல்லாததால் தமிழ்நாட்டிலும் "தண்ணி"), இவற்றை படைத்து அறிக்கையை சரி செய்வது வழக்கம் ஆகி விட்டது.
ஆங்கில ஆட்சியில் இவை எல்லாம் இருந்தது தான். இதற்கு கூட அவர்கள் தான் பழக்கி இருக்கின்றனர். ஆனால் நம்மவர் சர்க்காரியா கமிஷன் சொன்னது போல் விஞ்ஞான ரீதியில்,ஊழல் செய்கிறார்கள். தணிக்கை முறை அதை தெரிந்து கொள்வதில்லை; அல்லது கண்டு கொள்வதில்லை. வாழ்க தணிக்கை முறை.